தமிழ் சினிமாவில் பெரும்பாலும் வன்முறை, காதல் மற்றும் சமூக அரசியல் சார்ந்த கதைகள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கின்றன. அந்தவகையில் இப்பொழுது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள படம் தான் ‘டூரிஸ்ட் பேமிலி’. இந்தப் படத்தில் நடிகர் சசிகுமாரும், சினிமாவில் பல ஆண்டுகளாக பிரபலமாகி திறமையான நடிகையாக வலம் வரும் சிம்ரனும் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம் வெளியாகிய முதல் நாளிலேயே, ரசிகர்களிடையே இது குறித்த மிகப் பெரிய எதிரொலி உருவாகியுள்ளது. சமூக வலைத்தளங்களிலும், திரையரங்க Review வழியாகவும் பெரும்பான்மையானோர் இதைப் பற்றி நல்ல கருத்துக்களையே பகிர்ந்துள்ளனர். “ரொம்ப நாளைக்கு பிறகு குடும்பத்தோட சேர்ந்து பார்க்கக்கூடிய படம்னு உணர்ந்தோம்” எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
‘டூரிஸ்ட் பேமிலி’ என்ற பெயரே கதையின் அடிப்படையை முன்வைக்கிறது. ஒரு குடும்பம் சுற்றுலா பயணம் செல்லும் நிலையில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள், உறவுகளுக்கிடையேயான உணர்வுகள், சில நுணுக்கமான தருணங்கள் இவை அனைத்தும் கதையினை சிறப்பாக உருவாக்கியுள்ளன. இந்த வகை திரைப்படங்கள் தமிழில் வெகுகாலமாக வெளிவராத சூழலில், இந்தப் படம் அந்த இடத்தை அழகாக நிரப்பிவிட்டது என்று சிலர் கூறுகின்றனர்.
சசிகுமார் எப்பொழுதும் தனது இயல்பான நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். இந்த படத்திலும் அவர் ஒரு குடும்ப தந்தையாக மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். அவரின் முகபாவனைகள், திடீர் கோபம் என்பவற்றை கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப வாழ்வது போல காட்டியுள்ளார்.
சிம்ரன் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவைக் கலக்கிய நாயகி. இவர் தற்போது மீண்டும் ரசிகர்கள் மத்தியில் தன்னை நிரூபித்துக் கொண்டுவரும் இடத்தில், இந்த கதாப்பாத்திரம் அவருக்கு ஒரு பெரிய வெற்றியாக அமைந்திருக்கிறது.
“ஒரு புதிய இயக்குநர் இப்படியொரு குடும்ப படத்தை எடுத்திருக்கிறார் என்பது தான் எங்களை ஆச்சரியப்படுத்தியது” என ஒரு ரசிகர் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார். மேலும் சில விமர்சகர்கள் இப்படியான படம் அடிக்கடி திரையரங்குகளில் வெளியாக வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
Listen News!