• Jul 02 2025

நீங்க போட்டது தப்புக்கணக்கு சுதாகர்!கோபத்தின் உச்சியில் பாக்கியா..குழம்பியடிக்கும் ஈஸ்வரி

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியா ரெஸ்டாரெண்டுக்காக நான் வாங்கின லோன் 41 லட்சம் இருக்கு அந்த லோன நான் எப்புடி அடைக்கிறது என்று கோபியப் பாத்துக் கேக்கிறார். அதைக் கேட்ட ஈஸ்வரி நீ அவளவு பணத்தையா கடனா வாங்கினீ என்று ஆச்சரியப்படுறார். அதுக்கு பாக்கியா அதவிட அதிகமாவே பணம் வாங்கியிருக்கேன் இப்ப கொஞ்சப் பணத்த உழைச்சுக் கட்டிட்டேன் மீதி பணத்த அடைக்க என்ன பண்ணுறது சொல்லுங்க என்று கோபியிடம் கேக்கிறார்.

மேலும் வீட்ட அடமானம் வச்சுத் தான் நான் பணம் வாங்கியிருக்கேன் அத கட்டேல என்றால் வீட்டை ஜப்தி பண்ணிடுவாங்க என்று சொல்லுறார். அதைக் கேட்ட செழியன் அம்மா உன்ட இந்த நிலைமைக்கு என்ன சொல்லுறது என்றே தெரியல என்கிறார். அதனை அடுத்து பாக்கியா இந்தக் கஷ்டத்தில இருந்து வெளியில வாறதுக்கு எனக்கு சுதாகரோட பணம் முக்கியம் என்கிறார்.


மறுநாள் பாக்கியா சுதாகரோட கம்பெனிக்கு போய் நிற்கிறார். இதனை அடுத்து சுதாகர் உங்களுக்கு 20 லட்சம் தான் கொடுக்கலாம் என்று சொல்லுறார். அதைக் கேட்ட பாக்கியா நான் சொன்னத விட நீங்க ரொம்பவே குறைவா தாறீங்க என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து சுதாகர் இந்த டீல் ஓகே என்றால் சொல்லுங்க  நாம இதோட முடிச்சுக்கலாம் என்கிறார்.

பின் பாக்கியா சுதாகர் கிட்ட இருந்து பணத்த வாங்கி லோனை கட்டி முடிக்கிறார். இதனை அடுத்து செல்வி சுதாகர் இப்படி பணம் தருவார் என்று எதிர்பார்க்கவே இல்ல என்று சொல்லுறார். அதுக்கு பாக்கியா என்னாலயும் நம்ப முடியாமல் தான் இருக்கு என்கிறார். அதனை அடுத்து பாக்கியா தன்ர ரெஸ்டாரெண்டில வேலை செய்யுற ஆட்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தக் கொடுக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement