விஜய் டிவி தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ்சீசன் 8 நிகழ்ச்சியை தற்போது நடிகர் விஜய் சேதுபதி சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். இன்னும் ஒரு சில வாரங்களில் இறுதி பைனலுக்கு செல்ல இருக்கிறது. இந்நிலையில் விஜய் டிவி பிக்பாஸ் ஷூட்டில் தனது நண்பனை கண்டு சகஜமாக பேசிய வீடியோ இணையத்தில் படுபயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசனுக்கு அடுத்து சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் ட்ரோல்கள், மீம்ஸ்கள் என நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தாலும் தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களை அவர் அணுகும் முறை, சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் எல்லாம் பார்த்து ரசிகர்கள் விஜய் சேதுபதியை தற்போது கொண்டாடுகின்றார்கள். இந்நிலையில் கடந்த எபிசோடில் தனது நண்பரை எதேர்ச்சியாக சந்தித்த விஜய்சேதுபதி மேடை என்று கூட பார்க்காமல் சகஜமாக கதைத்த வீடியோ இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து பேசிக்கொண்டிருந்த விஜய் சேதுபதி எதிரே உள்ள பார்வையாளர்கள் கூட்டத்தில் அமர்ந்திருந்த தனது நண்பரை பார்த்து " ஹே ஜெய் மச்சான் நீ எங்கடா இங்க? இவன் என் கிளாஸ் மெட் நீ எப்படா வந்த? தனியா வந்தியா ஹா குடும்பத்தோட வந்தியா என்று விசாரிக்கிறார். பின்னர் ஒரு வார்த்தை கூட சொல்லாம வந்துட்ட என்று கலாய்த்தார். பின்னர் அவன் என் பிரண்டு இல்ல சும்மா சொன்னே மச்சான் உக்காருடா முடிச்சிட்டு பேசுவோம் என்று சகஜமாக பேசினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
Listen News!