பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் தற்போது தீபக், பவித்ரா, விஜே விஷால், சௌந்தர்யா, ஜாக்குலின், முத்துக்குமரன், அருண் பிரசாந்த் மற்றும் ராயன் ஆகியோரே எஞ்சி உள்ளார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதியாக இடம் பெற்ற டிக்கெட் டூ பினாலே டாக்கில் முதலாவது ஆளாக ராயன் வெற்றி பெற்றார். மீதமுள்ள ஏழு போட்டியாளர்களுள் யார் யார் பைனலுக்குள் நுழைவார்கள் என்பது கணிக்க முடியாததாகவே காணப்படுகின்றது.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே காணப்படும் நிலையில் எஞ்சியுள்ள போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்க் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
d_i_a
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதியாக இடம்பெற்ற டபுள் எரிக்ஷனில் மஞ்சரி மற்றும் ராணவ் குறைந்த வாக்குகளுடன் வெளியேறி இருந்தார்கள். தற்போது இவர்கள் 63 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்ததற்கான சம்பள விபரம் வெளியாகி உள்ளது.
அதன்படி, சிங்கள் மதராக தன்னுடைய குழந்தை, குடும்பத்தை காப்பாற்றி வரும் மஞ்சரி ஒரு பேச்சாளராக காணப்படுகின்றார். இவர் இன்ஜினியரிங் படித்து ஐடி கம்பெனியில் வேலை பார்த்த போதும் இவருக்கு பேச்சாளர் என்ற அடையாளமே உயர்ந்ததாக காணப்படுகின்றது. இதுவே பிக்பாஸ் வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்தது.
பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்து தனது திறமையான விளையாட்டை வெளிப்படுத்திய மஞ்சரிக்கு ஒரு நாளைக்கு 15 முதல் 18 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. அவர் 63 நாட்கள் இருந்ததற்கு 10 முதல் 12 லட்சம் ரூபா சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகின்றது.
இவரை தொடர்ந்து பிக்பாஸ் விட்டுக்குள் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக நுழைந்த ராணாவுக்கு ஒரு நாளைக்கு 20 முதல் 22 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம். அந்த வகையில் இவருக்கு மொத்தமாக 12 முதல் 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கும் என்ற தகவலும் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!