விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல தொடர்களில் ஒன்றான 'மகாநதி' சீரியல் சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர், தந்தையை இழந்த நான்கு சகோதரிகளின் வாழ்க்கைப் போராட்டத்தையும், அவர்களின் உணர்வுபூர்வமான பயணத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.
குடும்பக் கதைக்களம் மற்றும் வலுவான கதாபாத்திரங்களால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த தொடர், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது.

இந்த நிலையில், 'மகாநதி' சீரியலில் நடித்த நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதன்படி, தொடரின் நாயகனான விஜய் கதாபாத்திரத்தில் நடித்த சுவாமிநாதன் ஒரு நாளுக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. கதாநாயகியான காவேரி கதாபாத்திரத்தில் நடித்த லட்சுமி பிரியா ஒரு நாளுக்கு ரூ.10 ஆயிரம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், கங்கா கதாபாத்திரத்தில் நடித்த தரணி ரூ.6 ஆயிரமும், நர்மதா கதாபாத்திரத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் காவியா ரூ.2 ஆயிரமும் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், நிவின் கதாபாத்திரத்தில் நடித்த ருத்ரன் பிரவீன் ஒரு நாளுக்கு ரூ.10 ஆயிரம் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Listen News!