• Jan 02 2025

எனக்கு கப்பு வேணும்-முத்து! ஜாக்குலின் பிரன்ஷிப் எனக்கு வேணா-சவுந்தர்யா!

subiththira / 3 days ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியானது தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இன்றைய நாளின் அதிரடியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 


பிக்பாஸ் சீசன் 8 இந்த வார எலிமினேஷனுக்கு ராணவ், விஷால் ,பவித்ரா, அருண், தீபக், ரயான், மஞ்சரி, ஜாக்குலின் ஆகியோர் தெரிவாகியுள்ளார். சவுந்தர்யா மற்றும் முத்துக்குமரன் நாமினேஷனில் இல்லை. இந்நிலையில் இரண்டாவது ப்ரோமோவில்  முத்து " ஏற்கனவே அவருக்கு 2 ஓட்டுகள் போட்டாச்சு மறுபடியும் அவருக்கு ஒட்டு போடும் போது அது செல்லா ஓட்டகிருமானு நினைக்கிறேன். எல்லாருக்கும் வோட் போடமுடியாது எனக்கு கப் வேணும் கப்புக்காக நான் விளையாடிட்டு இருக்கேன்" என்று கூறியிருந்தார். 


இந்நிலையில் இந்த ப்ரோமோவில் விஷாலிடம் சவுந்தர்யா "இந்த ஷோக்கு நான் இவ்வளோ வருஷம் வெயிட் பண்ணி வாரேன்னு சொன்னா நான் எனக்காகத்தானே விளையாடனும். புனிதமான பிரன்ஷிப்பை காட்ட நான் இங்க வரவில்லை. ஜாக்குலினுடைய பிரன்ஷிப் எனக்கு எபெக்ட் ஆகுது. மறுபடி நான் அதுல போய் விழவிரும்பவில்லை. என்னோட கேம் நான்விளையாடுற மாதிரி இருக்காது என்று கூறியுள்ளார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.

Advertisement

Advertisement