தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி நடித்த கொலை படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மீனாட்சி சவுத்ரி. இதை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.
தமிழில் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும் பிரபலமாக காணப்படுகின்றார். அதிலும் தெலுங்கு சினிமாவில் புகழின் உச்சியிலேயே காணப்படுகின்றார். சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் படத்தில் துல்கருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
கோட் படத்தில் கிடைக்காத பாராட்டும் வரவேற்பும் லக்கி பாஸ்கர் படத்தின் மூலம் ஏராளமாக பெற்றுக் கொண்டார். அதிலும் லக்கி பாஸ்கர் படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக, குடும்ப பெண்ணாக நடித்திருந்தார். இதில் எந்தவித கவர்ச்சியும் இல்லாமல் ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மீனாட்சி, அடிக்கடி ரசிகர்களை ஏங்க வைப்பதற்காகவே புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதிலும் சமீபத்தில் இவர் மஞ்சள் நிற சேலையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.
இந்த நிலையில், நடிகை மீனாட்சி சவுத்ரி 2024ம் ஆண்டுக்கு குட் பாய் சொல்லும் வகையில் தனது புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இதன்போது அவர் எடுத்துக் கொண்ட வித்தியாசமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Listen News!