• May 13 2025

எனக்கு கொஞ்சம் பயமா தான் இருக்கு..ஒரேநாளில் 3படங்கள் ரிலீஸாவது குறித்து யோகிபாபு ஓபன்டாக்!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவை 'பாக்ஸ் ஆஃபிஸ் கிங்' என அழைக்கப்படும் யோகி பாபு, அவருடைய தனித்துவமான நடிப்பு, அடிக்கடி சிந்திக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகள் என்பன மூலம் ரசிகர்களிடம் வலிமையான இடத்தைப் பிடித்துள்ளார். இவரது படங்கள் அடிக்கடி வெளியாகிக் கொண்டே இருந்தாலும், மே 16ம் திகதி யோகி பாபு வெற்றிக்காக பெரிய சவாலை எதிர்கொள்ள இருக்கிறார்.


இந்நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் கலந்து கொண்ட யோகி பாபு, ஒரே நாளில் வெளியாகும் மூன்று திரைப்படங்கள் குறித்து தன்னுடைய உணர்வுகளைப் பகிர்ந்துள்ளார். அந்த பேட்டியில் அவர் பேசிய சில வார்த்தைகள் நெஞ்சைத் தொடும் வகையில் காணப்பட்டது.

மே 16ம் திகதி 3 மாபெரும் நகைச்சுவை நடிகர்களின் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அத்தகைய படங்களாக, " ஜோரா கைய தட்டுங்க", "DD Next Level" மற்றும் "மாமன்" என்பன விளங்குகின்றன. இந்த மூன்று படங்களும் வெவ்வேறான கதைக்களங்களுடன் உருவாகியிருக்கின்றது.


பேட்டியின் போது யோகிபாபு," சந்தானம் நடித்திருக்கும் 'DD Next Level' படத்தில் நகைச்சுவை முழுமையா இருக்கும். சூரி நடித்திருக்கும் 'மாமன்' படம் எமோஷனலாக இருக்கும். ஆனா நான் நடித்த 'ஜோரா கைய தட்டுங்க' படத்தில கொஞ்சம் சீரியஸ் கரெக்டர் பண்ணிருக்கேன். அது தான் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு." எனக் கூறியுள்ளார்.

யோகி பாபுவின் மனம் திறந்த இந்தப் பேச்சு அவரது வாழ்க்கையின் நேர்த்தியைக் காட்டுகின்றது. இந்த தகவல்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி ரசிகர்கள் ஒவ்வொருவரும் பல கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement