• Jan 12 2025

தீபக் முன் கோபத்தை குறைக்கணும்! முத்துவின் தலைக்கனத்தை போகியில் போடணும்!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 இன்னும் ஒரு வாரத்தில் நிறைவுக்கு வர உள்ளது. இந்த சீசனில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் ரிப்லேஸ்மெண்டாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்கள்.  டபுள் எலிமினேஷன் முடிவில் அருண் மற்றும் தீபக் வெளியேறி இருக்கிறார்கள். இந்நிலையில் அடுத்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரீ என்ட்ரி கொடுத்த பழைய போட்டியாளர்கள் தங்களுடைய பங்கிற்கு விளையாடி வந்ததுடன் தமது வன்மத்தையும் கொட்டி தீர்த்து இருந்தனர். இந்நிலையில் தற்போது வெளியாகிய ப்ரோமோவில் விஜய் சேதுபதி " இந்த போகியில் இதை போட்டு எரிக்க விரும்புகிறேன் என்று எதை நினைக்கிறீங்க" என்று கேட்கிறார்.


என்னை பற்றிய ஓவர் விமர்சனங்களை நான் கொடுக்குறேன் என்று நினைக்கிறேன், முன் கோபத்தை போட்டு எரிக்கனும் என்று நினைக்கிறேன், கூச்சத்தை எரிக்கணும் என்று நினைக்கிறேன் என்று ஜாக்குலின் ,தீபக், ரயான் சொல்கிறார்கள். பிக்பாஸ் வீட்டில் இந்த மெமரி மட்டும் எனக்கு  வேணாம் என்றால் எதை சொல்வீங்க  என்று மறுபடியும் விஜய் சேதுபதி கேட்கிறார். 


இந்நிலையில் அடுத்து சவுந்தர்யா ராணவ் கீழ விழும் போது நான் நடிக்கிறான் நடிக்கிறான் என்று சொன்னேன் அந்த ஞாபகங்கள் எனக்கு வேண்டாம் என்று சொல்கிறார். முத்து என்னுடைய கேப்டன்ஷி நேரம் நான் கோபப்பட்டது வேணாம் என்று சொல்கிறார். பின்னர் விஜய் சேதுபதி கேப்டன்ஷி என்று சொல்லும் போது தலைக்கனம் எரிச்சே அதைத்தானே எரிக்கணும் என்று சொல்கிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது. 

Advertisement

Advertisement