• Dec 27 2024

கோட் படத்தில் அஜித் உள்ளாரா? வெங்கட் பிரபு சொன்ன சுவாரஸ்ய தகவல்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

இளைய தளபதி விஜய் நடிக்கும் கோட் திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளதோடு இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். .

கோட் படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன்காக இயக்குனர் வெங்கட் பிரபு பல செய்தி நிறுவனங்களுக்கும் youtube சேனல்களுக்கும் பேட்டி அளித்து வருகின்றார். அதில் பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து உள்ளார்.

இந்த நிலையில், கோட் படத்தில் அஜித் இடம் பெறும் காட்சி ஒன்று இருப்பதாகவும் வெங்கட் பிரபு குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் தற்போது தல, தளபதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


கோட் படம் மங்காத்தா படத்தை விட 100 மடங்கு சிறப்பாக இருக்கும் என வெங்கட் பிரபு கூறி இருந்தார். அதேபோல இந்த படத்தின் டிரைலர் வெளியான நாளிலிருந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி இருந்தது.

இந்த நிலையில், கோட் படத்தில் அஜித் இடம் பெற்றுள்ளாரா என்ற கேள்விக்கு வெங்கட் பிரபு பதில் அளிக்கையில், மங்காத்தா படத்தில் வேலாயுதம் பட காட்சி இடம் பெற்றது. இதனால் கோட் படத்திலும் அஜித் இடம்பெறும் காட்சி உள்ளது. ஆனால் அது என்ன மாதிரியான சீக்வென்ஸ் என்று நான் சொல்ல மாட்டேன். படத்தில் அஜித்திற்கும் காட்சி உள்ளது. அதேபோல குட் பேட் அக்லி படத்தில் விஜய் உள்ள காட்சி உள்ளது. அஜித்தும் விஜய்யும் நெருங்கிய நண்பர்கள். கோட் படத்தில் அஜித் இருக்கும் காட்சி ரசிகருக்கு பெரும் திருப்தியை கொடுக்கும் என கூறியுள்ளார். வெங்கட் பிரபுவின் இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement