• Dec 28 2024

இசைஞானியின் கடைக்குட்டி ராஜாவுக்கு இத்தனை கோடி சொத்துக்கள் உண்டா?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தில் காணப்படுபவர் தான் யுவன் சங்கர் ராஜா. இவர் இளையராஜாவின் கடைக்குட்டி மகன் ஆவார். இன்றைய தினம் தனது 45 வது பிறந்தநாளை கொண்டி வருவதால், யுவன் சங்கர் ராஜாவுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

1997 ஆம் ஆண்டு வெளியான அரவிந்தன் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமான யுவன் சங்கர் ராஜாவுக்கு அவருடைய ஆரம்ப கால படங்கள் பெரிய அளவில் கவனத்தில் ஈர்க்கவில்லை. அதன் பின்பு சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு யுவன் சங்கர் ராஜாவின் மார்க்கெட் உயர்ந்தது.

ஆரம்பத்தில் பாடல்களுக்கு மட்டுமே அதிகம் கவனம் கொடுத்த  யுவன் சங்கர் ராஜா, பிற்காலத்தில் படத்தின் தன்மையை ரசிகர்களிடம் கடத்த பின்னணி இசை முக்கியமானது என்பதை புரிந்தார். அதன் பின்பு பின்னணி இசைகளுக்கும் கவனம் செலுத்தி இன்று பின்னணி இசையில் ராஜாவாக திகழ்ந்து வருகின்றார்.

படத்தின் இசையை கேட்டு அதற்காக பணியாற்றுவதில் கைதேர்ந்தவர்களாக யுவன் சங்கர் ராஜா காணப்படுகின்றார். இவரை பொருத்தவரை வளர்ந்த நடிகர் வளர்ந்து வரும் நடிகர் என்றெல்லாம் கணக்கில்லை. இன்றைக்கு ஒரு படத்திற்கு பாடல்கள் மற்றும் பின்னணி இசை அமைக்க ஐந்து கோடி முதல் எட்டு கோடி வரை சம்பளமாக வாங்குகின்றார்.


தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் கோட்  படத்திற்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி உள்ளாராம். இவருடைய தயாரிப்பில் வெளியான படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்று வருகின்றன. இதனால் யுவன் சங்கர் ராஜாவுக்கு வருமானம் அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில், யுவன் சங்கர் ராஜா சென்னையில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களாவை கட்டியுள்ளார். மேலும் அந்த பங்களா இருக்கும் இடத்தின்  மதிப்பும் பல கோடிகளைத் தாண்டும் என கூறப்படுகின்றது. அத்துடன் பல கோடி மதிப்பிலான சொகுசு கார்களை வைத்துள்ளார். குறிப்பாக, பென்ஸ் GLE கிளாஸ், ஆஸ்டன் மார்டின் வேன்குவிஸ், மினி கூப்பர் S போன்ற கார்களை வைத்துள்ளார்.

அதன்படி யுவன் சங்கர் ராஜாவுக்கு குறைந்தபட்சம் 125 கோடி வரை சொத்துக்கள் இருக்கும் என கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement