• Dec 27 2024

சூடுபிடித்த மலையாள சினிமா விவகாரம்.. தெலுங்கிலும் அறிக்கையை வெளியிடுங்கள்! சமந்தா கோரிக்கை

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் தற்போது பெண் கலைஞர்களுக்கு எதிராக நடக்கும் உடல் ரீதியான தொல்லைகள் குறித்து ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு பல பெண்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்பு ஹேமா கமிட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டபோது, அதில் மலையாள சினிமாவில் பெண்கள் போகப் பொருளாக பார்க்கப்படுவதாகவும் படப்பிடிப்பு தளத்தில் பலவிதமான சங்கடத்தை எதிர்கொள்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை வெளியானதற்கு பிறகு பல நடிகைகள் தங்களுடைய வாழ்வில் இடம் பெற்ற துன்புறுத்தல்கள் பற்றி வெளிப்படையாகவே பேசத் தொடங்கியுள்ளார்கள். அந்த வகையில் ரேவதி சம்பத் என்ற நடிகை நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக் மீது புகார் அளித்தார். அதன் பின்பு சித்திக் ராஜினாமா செய்தார். இப்படி ஒவ்வொரு நடிகைகளும் பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது புகார் கூறிய நிலையில், அது மலையாள சினிமாவில் பெரும் புயலை கிளப்பியது.


இதன் காரணத்தினால் மலையாள திரைப்பட சங்கம் ஒட்டுமொத்தமாக கலைக்கப்பட்டது. அதில் நடிகர் சங்கத் தலைவராக இருந்த மோகன்லால் உட்பட 17 நிர்வாகிகளும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தார்கள். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தற்போது நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை போலவே தெலுங்கு திரை உலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அதில் கேரளாவில் WCC என்ற அமைப்பின் செயல்பாடுகளை தாம் வரவேற்பதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement