• May 03 2026

மமிதா பைஜூவை விட தனுஷுக்கு இத்தனை மடங்கு அதிகமா? - 'கர' பட சம்பள விவரம்

shali / 59 minutes ago

Advertisement

Listen News!

'கர' திரைப்படம் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும் சுராஜ் வெஞ்சரமூடு, கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும், படத்தில் நடித்த நடிகர்கள் பெற்றுள்ள சம்பளம் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

அதன்படி, இந்த படத்தில் நடிக்க தனுஷ் சுமார் ரூ.58 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், தற்போது தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாகி வரும் மமிதா பைஜூக்கு ரூ.2 கோடி வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவும் ரூ.2 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

மேலும், ஜெயராம் ரூ.1 கோடியும், இப்படத்திற்கு இசையமைத்த G. V.பிரகாஷ் ரூ.4 கோடியும் சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பள விவரங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement