• May 03 2026

வசூலில் சறுக்குகிறதா ‘கர’.. தனுஷ் - மமிதா பைஜு கூட்டணிக்கு என்னாச்சு? முழுவிபரம் இதோ.!

shali / 5 hours ago

Advertisement

Listen News!

கர திரைப்படம் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படமாக கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. கிராமத்து பின்னணியுடன் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடையே ஆரம்பத்தில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் வெளியான பின் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.


படத்தின் வசூலை பொருத்தவரை, முதல் நாளில் ரூ.6.20 கோடி வசூல் செய்து நல்ல தொடக்கத்தை பெற்றது. இரண்டாம் நாளில் இந்த வசூல் மேலும் உயர்ந்து ரூ.6.95 கோடியாக அதிகரித்தது. இதனால் படம் வார இறுதியில் பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மூன்றாம் நாளான சனிக்கிழமையில் வசூல் குறைந்து ரூ.5.20 கோடியாக பதிவாகியுள்ளது. இது படத்திற்கு சற்று அதிர்ச்சியான மாற்றமாக பார்க்கப்படுகிறது.

பொதுவாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பட வசூல் அதிகரிக்கும் நிலையில், இங்கு குறைவு ஏற்பட்டது ரசிகர்களையும், தயாரிப்பாளர்களையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. 

இருப்பினும் இன்று விடுமுறை நாள் என்பதால் குடும்ப ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வர வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் ஞாயிற்றுக்கிழமை வசூல் மீண்டும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் படம் நிலையான வசூலை பெறுமா என்பது பார்க்க வேண்டிய ஒன்றாக உள்ளது.

Advertisement

Advertisement