• Dec 26 2024

மீண்டும் உள்ளே வருகிறார் சச்சனா? பிக் பாஸ் பிளான் என்ன? சூடுபிடிக்கும் ஆட்டம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் எட்டாவது சீசன் ஆரம்பிக்கும் போது கமலுக்கு பதிலாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்க போகின்றார் என்ற அறிவிப்பு வெளியானது தான் தாமதம். கமல் இடத்தை விஜய் சேதுபதி எப்படி நிரப்ப போகின்றார்? இந்த சீசன் டிஆர்பி யில் பலமா அடி வாங்க போவது உறுதி என்று பலவாறு பேசினார்கள்.

உலக நாயகன் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியதால் பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் கூட இந்த நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்ய தயங்குகின்றது என்ற தகவலும் உலா வந்தது.

கடந்த வருடங்களில் பிக் பாஸ் வீட்டைச் சுற்றி காட்டிய வழக்கத்தையும் இந்த வருடம் செய்யவில்லை. போன வருடம் இரண்டு வீடு காணப்பட்டது. ஆனால் இந்த சீசனில் என்ன ஸ்பெஷல் என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன. அதற்கு தெளிவான பதில் இல்லை. இதனால் இந்த சீசன் டல்லாக தான் போகப் போகின்றது என்று பலரும் நினைக்கத் தொடங்கினார்கள்.


இதை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 8 விஜய் சேதுபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டபோது அவர் பல கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது பதிலடியை கொடுத்திருந்தார். அதன் பின்பு பிக் பாஸ் வரலாற்றிலேயே முதன் முதலாக 24 மணி நேரத்தில் முதலாவது எலிமினேஷன் நடைபெற்றது. அதில் மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சச்சனா கண்ணீரோடு இந்த வீட்டில் இருந்து வெளியேறியிருந்தார்..

இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் சீசன் 8 முதலாவதாக எலிமினேட் ஆகி வெளியே சென்ற சச்சனா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய உள்ளமை உறுதியாக உள்ளது. தற்போது இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத  நிலையிலும், பிக் பாஸ் சம்பந்தமாக உறுதியான தகவல்களை தெரிவிக்கும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Advertisement

Advertisement