• Apr 30 2026

சிறகடிக்க ஆசை சீரியலில் பலரையும் நெகிழவைத்த ப்ரோமோ..! ஒன்றிணைந்த மாமா மச்சான்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்தான் சிறகடிக்க ஆசை சீரியல். விஜய் டிவி சீரியல்களிலேயே டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் காணப்படுகின்றது. 

சிறகடிக்க ஆசை சீரியல் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட போதும் குறுகிய காலத்திற்கு உள்ளையே தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டது. நாளாந்தம் ஒளிபரப்பாகும் விறுவிறுப்பான கதைக்களத்துடன் சுவாரஸ்யமும் இந்த சீரியலில் கலந்துள்ளது

இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த இரண்டு நாட்களில் என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

ஏற்கனவே சத்யா எக்ஸாம் எழுத முடியாது என வீட்டில் அழுதபோது அதனை எப்படியாவது தீர்த்து வைப்பதாக முத்து சபதம் எடுத்தார். அதன்படியே முத்துவும் மீனாவும் ப்ளான் போட்டு பிரின்சிபல் முன்னாடி நடித்தார்கள்.


இதை தொடர்ந்து மீனாவை முத்து குடித்துவிட்டு அடிப்பது போல் நாடகமாட அதனை நம்பிய பிரின்ஸ்பல் இப்படியான குடும்பத்தில் நீ கட்டாயம் படிக்க வேண்டும் நாளை முதல் கிளாசுக்கு வா எக்ஸாம் எழுது என்று சத்யாவுக்கு சொல்லுகின்றார். இதனால் சத்யா சந்தோஷப்படுகின்றார்.

ஆனால் அதன் பின்பு பிரின்ஸ்பல் போலீசுக்கு கால் பண்ணி முத்து குடித்துவிட்டு மீனாவை அடித்ததாக மாட்டி விடுகின்றார். இதனால் முத்து ஜெயிலில் அடைக்கப்படுகின்றார். இதை பார்த்து சத்யா அழுகின்றார். 

தற்போது வெளியான ப்ரோமோவின் அடிப்படையில், இதுவரையில் முத்துவை மதிக்காத சத்யா மனம்மாறி முத்து செய்த காரியத்திற்காக அவருடைய காலில் விழுந்து மன்னிப்பு கேட்கின்றார். இந்த ப்ரோமோ பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.

இதே வேளை சத்யாவை மாட்டி விடுவதற்காக ரோகிணி எடுத்த பிளான்கள் எல்லாம் தவிடு பொடியாகி வரும் நிலையில் அடுத்து எப்படி சிக்க வைக்க போகின்றார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement