• Jun 16 2026

தனுஷின் D55 படப்பிடிப்பு தளத்திலிருந்து கசிந்த ரகசியத் தகவல்!

shali / 8 hours ago

Advertisement

Listen News!

தனுஷின் 55-வது திரைப்படம் குறித்த புதிய அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் தனுஷ் தற்போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் தனது 55-வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை தனுஷின் வொண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகி வரும் இந்தப் படத்தில் மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் கதாநாயகிகளாக சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா இணைந்துள்ளனர். இப்படத்தில் தனுஷ் உளவாளி கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுவதால் ரசிகர்களின் ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது.


திரில்லர் பின்னணியில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்தை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆயுத பூஜை வெளியீடாக திரையரங்குகளில் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், டி55 படத்தின் முக்கிய அப்டேட் வரும் ஜூன் 18-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான சிறப்பு போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு படத்தின் முதல் பார்வை (First Look) போஸ்டர் தொடர்பானதாக இருக்கலாம் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் டி55 குறித்த அடுத்த அப்டேட்டை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement