• Jun 20 2026

வனிதாவின் முதல் காதலர் இவரா.? இதுவரை தெரியாமல் போச்சே.!! நடிகை ஓபன்டாக்

shali / 1 hour ago

Advertisement

Listen News!

நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது முதல் காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவரது கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

அந்த பேட்டியில் பேசிய வனிதா, “என்னுடைய முதல் காதல் பற்றி பேச வேண்டும் என்றால், இப்போது என்னால் எதையும் வெளிப்படையாக சொல்ல முடியாது. என்னை முதன் முதலாக காதலித்தது யார் அல்லது நான் யாரை முதலில் காதலித்தேன் என்பதை வெளியே கூற விரும்பவில்லை. 


அந்த உண்மையை நான் சொன்னால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதிர்ந்துவிடும். அதனால் அதை ரகசியமாக வைத்திருப்பதே நல்லது என்று நினைக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “என்னுடைய முதல் காதல் பற்றிய நினைவுகள் எப்போதும் எனக்குள் மட்டுமே இருக்கும். அந்த ரகசியத்தை நான் பல வருடங்களாக பாதுகாத்து வருகிறேன். அது எனக்கும், அந்த சம்பந்தப்பட்ட நபருக்கும் மட்டுமே நன்றாக தெரியும். அந்த விஷயத்தை வெளியில் பகிர வேண்டிய அவசியம் எனக்கு தோன்றவில்லை.” என்றும் கூறியுள்ளார்.

வனிதாவின் இந்த பேச்சு ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் குறிப்பிட்ட அந்த நபர் யார் என்ற கேள்வி தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதமாக மாறியுள்ளது. இருப்பினும், தனது முதல் காதல் குறித்த உண்மையை வெளிப்படுத்தும் எண்ணம் தற்போது இல்லை என்பதை வனிதா தெளிவுபடுத்தியுள்ளார். அவரது இந்த மர்மமான பதில் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement