• Jun 24 2026

‘தர்மன்’ படத்தின் உண்மையான ஜானர் இதுதானா? ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173வது திரைப்படமாக உருவாகி வரும் ‘தர்மன்’ படத்தின் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இந்த படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். 

தமிழ் சினிமாவின் இரு ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு திரைப்படத்தில் இணைந்திருப்பது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.


இந்த நிலையில், படத்தின் கதை குறித்த முக்கிய தகவலை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ‘தர்மன்’ திரைப்படம் 5 ரூபாய் டாக்டரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட படம் அல்ல என்றும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படையப்பா மற்றும் வேட்டையாடு விளையாடு ஆகிய படங்களின் அம்சங்கள் கலந்த ஒரு அதிரடி த்ரில்லராக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த படத்தில் “டாக்டர் ஸ்வாக்” எனப்படும் தனித்துவமான கதாபாத்திர பாணியும் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் சூப்பரான திரைமுகம், விறுவிறுப்பான திரைக்கதை, அதிரடி காட்சிகள் மற்றும் உணர்வுபூர்வமான தருணங்கள் ஆகியவை இணைந்து ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ‘தர்மன்’ திரைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement