• Jul 11 2025

பா.ரஞ்சித்துடன் இருப்பதால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.! மனகுமுறலை வெளிப்படுத்திய கலையரசன்!

subiththira / 16 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் திறமைகளை மதிக்கும் சூழ்நிலை எப்போதுமே இருந்துவந்தது என்று பொதுவாக கூறப்படுகின்றது. ஆனால் அதற்குப் பின்னால் நடந்துகொண்டிருக்கும் சாதி, சமூக மற்றும் அரசியல் அடிப்படையிலான பாகுபாடுகள், வாய்ப்பு மறுப்புகள், திரைத்துறையின் மறைமுகச் செயற்பாடுகள் ஆகியவை தற்போது பிம்பத்தை மீறி வெளிவரத் தொடங்கியுள்ளன.


புகழ்பெற்ற இயக்குநர் பா.ரஞ்சித்தின் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நடிகர் கலையரசன், சமீபத்தில் ஒரு பேட்டியில் வெளியிட்ட கருத்துகள் தற்போது பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.


அதன்போது, “தமிழ் சினிமாவில் சாதி இல்லைனு சொல்வாங்க. ஆனா உள்ள நிஜமாக பார்த்தால் சாதி பாகுபாடு மிகவும் மோசமாகவே இருக்கு. பா. ரஞ்சித்துடன் இருப்பதால் எனக்கு வாய்ப்புகள் மறுக்கபட்டுள்ளன. சிலர் என்னை நடிக்க அழைப்பதற்கு ஜோசிக்கிறார்கள்.” எனக் கூறியிருந்தார். இக்கருத்துகள் தற்பொழுது சமூக ஊடகங்களில் பரவி ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 

Advertisement

Advertisement