• Sep 04 2025

‘கட்டா குஸ்தி 2’ ஷூட்டிங் ஸ்டார்ட்...! பூஜை புகைப்படங்கள் வைரல்...!

Roshika / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷ்ணு விஷால், தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள ‘ஆர்யன்’ திரைப்படம் அக்டோபர் 31ம் தேதி வெளியீடுக்கு தயாராக உள்ளது. இதைத் தொடர்ந்து, ‘ஓர் மாம்பழ சீசனில்’, ‘இரண்டு வானம்’ போன்ற படங்களும் கைவசத்தில் உள்ளன.


2022-ல் வெளிவந்து வெற்றி பெற்ற 'கட்டா குஸ்தி' திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், உலகளவில் ரூ.30 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதனை தொடர்ந்து, இயக்குநர் செல்லா அய்யாவும், நடிகர் விஷ்ணு விஷாலும் மீண்டும் இணைந்து ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தை உருவாக்க உள்ளனர்.


இந்தப் படம் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் இணைந்து தயாரிக்கின்றன. கதாநாயகியாக மின்னும் ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட் மற்றும் கருணாகரன் முக்கிய வேடங்களில் இடம்பெறுகின்றனர். இசையமைப்பை ஷான் ரோல்டன் மேற்கொள்கிறார்.


தற்போது, ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் பூஜை நிகழ்ச்சி இன்று நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட படக்குழுவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

Advertisement

Advertisement