• Dec 26 2024

அரசுசெய்யாததை செய்த ராகவா லாரன்ஸ் - பாலா.. இன்ப அதிர்ச்சியில் மாணவ, மாணவிகள்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!


கடந்த சில ஆண்டுகளாக அரசு செய்யாததை ராகவா லாரன்ஸ் மற்றும் பாலா இணைந்து செய்ததை அடுத்து மாணவ மாணவிகள் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

’கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா கடந்த சில ஆண்டுகளாக தன்னால் முடிந்த உதவிகளை ஏழை எளியவர்களுக்கு செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக சென்னை வெள்ளத்தின் போது அவர் செய்த உதவிகள் மிகப்பெரிய பாராட்டுகளை குவித்து வந்தது என்பதும் தெரிந்தது.

அதுமட்டுமின்றி இருசக்கர வாகனங்கள் வாங்கி கொடுப்பது, ஆட்டோ வாங்கி கொடுப்பது, மருத்துவ செலவுக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட பல உதவிகளை பாலா தனக்கு வரும் சொற்ப வருமானத்தில் செய்து வரும் நிலையில் சமீப காலமாக அவர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து பெரிய பெரிய உதவிகளையும் செய்து வருகிறார்.

அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசே மாணவ மாணவியருக்கு லேப்டாப்  தந்து கொண்டு இருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கொடுக்காததால் மாணவ மாணவிகள் சிரமப்படுகின்றனர். தங்களது கல்விக்கு லேப்டாப் தேவை என்றும் ஆனால் அதே நேரத்தில் லேப்டாப் வாங்கும் அளவுக்கு தங்களிடம் வசதி இல்லை என்றும் பாலாவிடம் மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்த நிலையில் சில மாணவர்களுக்கு ராகவா லாரன்ஸ் உதவியுடன் அவர் லேப்டாப் கடை வாங்கி கொடுத்து உள்ளார். இது குறித்த வீடியோவை பாலா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்து பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சிலர் எங்களுக்கும் லேப்டாப் தேவை, எங்களுக்கும் சில உதவிகள் தேவை என கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வரும் நிலையில் அவர்களுக்கும் விரைவில் உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Advertisement

Advertisement