• Dec 25 2024

கதாநாயகனை கடவுள் படைப்பதில்லை.. மேஜர் முகுந்துக்கு மரியாதை செய்த ‘அமரன்’ படக்குழு..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!


சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘அமரன்’ என்ற திரைப்படம் இந்தியாவிற்காக உயிர் தியாகம் செய்த மேஜர் முகுந்த் என்பவரின் வாழ்க்கை வரலாறு கதைதான் என்ற நிலையில் இன்று மேஜர் முகுந்த் அவர்களின் நினைவு நாளை ஒட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் படக்குழுவினர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அமரன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படும் நிலையில் இந்த படம் இந்திய ராணுவத்தின் மேஜராக இருந்த முகுந்த் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் ஏப்ரல் 25ஆம் தேதி ஆன இன்று மேஜர் முகுந்த் அவர்கள் தாய் மண்ணிற்காக உயிர் தியாகம் செய்த நாள் என்பதால் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் ’கதாநாயகனை கடவுள் படைப்பதில்லை, கடமையாற்றும் வீரனை உலகம் கொண்டாட மறுப்பதில்லை, அந்த மாவீரனை நினைத்து பெருமிதம் கொள்கிறது தமிழகம்’ என்ற வசனத்துடன் கூடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement