தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'சத்தியவான் சாவித்திரி' திரைப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், கோர்ட் ரூம் டிராமா வகையைச் சேர்ந்ததாக உருவாகியுள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் எதிர் தரப்பு வழக்குரைஞராக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

வழக்கமான நீதிமன்றக் கதைகளிலிருந்து மாறுபட்ட திரைக்கதை மற்றும் வலுவான கதாபாத்திர அமைப்புகளுடன் இந்த படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் இடையேயான நீதிமன்ற மோதல்கள் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 'ஹார்ட்பீட்' புகழ் சாருகேஷ், பால சரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன், மாலா பார்வதி, தீபா, ஏ. வெங்கடேஷ் மற்றும் ஸ்டில்ஸ் பாண்டியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான படத்தின் போஸ்டர்கள் மற்றும் அறிவிப்புகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்த நிலையில், 'சத்தியவான் சாவித்திரி' திரைப்படம் ஜூலை 24ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷின் வித்தியாசமான கதாபாத்திரமும், மிஷ்கினின் சக்திவாய்ந்த நடிப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
Listen News!