• May 02 2026

மம்மூட்டி - மோகன்லால் இணைந்தால் சும்மாவா? ஒரே நாளில் அமோக சாதனை..

shali / 3 hours ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்துள்ள ‘பேட்ரியாட்’ திரைப்படம் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவான இந்த படம், பிரம்மாண்டமான நட்சத்திர அணியால் வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இதில் மோகன்லால், மம்மூட்டி, நயன்தாரா, பகத் ஃபாசில், குஞ்சக்கோ போபன் மற்றும் ரேவதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் வசூல் தரப்பிலும் இந்த படம் மிகப்பெரிய சாதனையை பதிவு செய்துள்ளது. முதல் நாளில் உலகளவில் சுமார் ரூ.30 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இந்த ஆண்டின் முக்கியமான ஓப்பனிங் வசூல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

படத்தின் கதை, இயக்கம் மற்றும் நடிப்பு குறித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல கருத்துக்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக பல முன்னணி நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்திருப்பது, படத்தின் முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், ‘பேட்ரியாட்’ திரைப்படம் தனது முதல் நாளிலேயே வலுவான தொடக்கத்தை பதிவு செய்துள்ளதால், வரும் நாட்களில் மேலும் பெரிய வசூல் சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement