• Oct 24 2026

நேபாள சிறுவனுக்காக மம்முட்டி எடுத்த முடிவு.! குவியும் பாராட்டுகள்

shali / 1 week ago

Advertisement

Listen News!

நேபாளத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனின் இதயத்தில் ஏற்பட்ட அடைப்பைச் சரிசெய்ய, நடிகர் மம்முட்டி தனது அறக்கட்டளை மூலம் இலவச அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ள சம்பவம் பலரது கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் மம்முட்டி, திரைப்படங்களில் தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருவதுடன், சமூக நலப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார். குறிப்பாக, மருத்துவ உதவிகள் தேவைப்படும் ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை வழங்கி வருவது பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், நேபாளத்தைச் சேர்ந்த விக்ரம் என்ற 17 வயது சிறுவனுக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் சிறுவனின் உடல்நிலை தொடர்பில் கவலை ஏற்பட்டதுடன், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.

இதனை அறிந்த நடிகர் மம்முட்டி, தனது அறக்கட்டளை ஊடாக சிறுவனுக்கு உதவ முன்வந்துள்ளார். இதன்படி, கேரள மாநிலம் ஆலுவாவில் அமைந்துள்ள ராஜகிரி மருத்துவமனையில் சிறுவனுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் சிறுவன் விக்ரமின் இதயத்தில் காணப்பட்ட அடைப்பை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகச் சரிசெய்துள்ளனர்.

மருத்துவ உதவி கிடைக்க வேண்டிய சூழலில் இருந்த சிறுவனுக்கு மம்முட்டி வழங்கிய இந்த ஆதரவு, மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

திரையில் மட்டுமல்லாது, நிஜ வாழ்க்கையிலும் உதவும் மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் மம்முட்டியின் இந்தச் செயல், சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுகளைப் பெற்று வருகின்றது.

Advertisement

Advertisement