• Apr 29 2026

நயன்தாரா–யாஷ் இணைந்த ‘Toxic’ இல் சிக்கலா.. வெளியீடு திடீரென தள்ளிப்போனது ஏன்?

shali / 1 hour ago

Advertisement

Listen News!

Toxic திரைப்படம், யாஷ் நடிப்பில் உருவாகி வரும் மிகப் பெரிய பான் இந்தியன் திட்டமாக ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை KVN Productions நிறுவனம் தயாரித்து வருகிறது. 


யாஷ் ஏற்கனவே KGF Chapter 1 மற்றும் KGF Chapter 2 படங்களின் வெற்றியின் மூலம் இந்திய அளவில் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்த நிலையில், இந்த புதிய படம் அவருடைய அடுத்த பெரிய மைல்கல்லாக கருதப்படுகிறது.

இப்படத்தில் ஹுமா குரேஷி, நயன்தாரா, கியாரா அத்வானி , ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளராக ரவி பசூர் இணைந்துள்ளதால், படத்தின் இசை மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், படம் வரும் ஜூன் 4ம் தேதி வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ரிலீஸ் தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றம் ஏற்பட்டாலும், படக்குழு விரைவில் புதிய வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. இப்படம் மிகப் பெரிய அளவில் உருவாகி வருவதால், தரத்தை குறைக்காமல் முழுமையாக தயாரிக்கவே இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement