• Dec 26 2024

பெண்கள் கல்லூரிக்கு CHEAP GUEST ஆக சென்ற நிக்சன்! மரண குத்து குத்திய வைரல் வீடியோ

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்து வளர்ந்த நிக்சன் ஒரு இந்திய நடிகர் என்பதோடு ராப் பாடல்களை பாடுவதில் பிரபலமாக காணப்பட்டார்.

விஜய் ஆண்டனியின் “திமிரு புடிச்சவன்” திரைப்படத்தின் மூலம் அவர் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அவரது சிறப்பான நடிப்பு அவரது நடிப்புத் திறமைக்கு சான்றாக அமைந்தது.

இதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற நிக்சன், சிறப்பாக விளையாடி மக்களை மனதை கவர்ந்த போதிலும், ஐஷுவுடன் காதல் வலையில் சிக்கி சிறிது காலம் தடுமாறி காணப்பட்டார்.


எனினும், பிக் பாஸ் வீட்டில் இருந்து ஐஷு வெளியேறிய பின்னர் மீண்டும் தனது ஆட்டத்தை அனல் பறக்க வைத்திருந்தார். இவ்வாறு தீயாய் விளையாடிவந்த நிக்சன், வெற்றியை எட்டாமல் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.


பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிக்சனுக்கு அதிஷ்டம் அடித்தது போல, அவரது முதலாவது படைப்பு வெளியாகி, செம வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

இதைத்தொடர்ந்து மாயா கேங் உடன் அவ்வப்போது புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில், பெண்களின் கல்லூரி ஒன்றுக்கு சீப் கெஸ்ட் ஆக அழைக்கப்பட்ட நிக்சன், அங்கு மரண குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement