• Dec 25 2024

இப்போ நானும் தாத்தா தானே- திடீரென பக்தி மானாக மாறிய பாக்கியலட்சுமி கோபி- இப்பிடி மாறிட்டாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

1990ஆம் ஆண்டு 'மின்சார பூவே' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சதீஷ். தொடர்ந்து படங்களில் போதிய வாய்ப்பு கிடைக்காததால் சீரியலில் கவனம் செலுத்திய சதீஷ், சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட மந்திர வாசல், சூலம், கல்யாண பரிசு 2, ஆனந்தம் உள்ளிட்ட சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

முழுக்க முழுக்க சீரியல் நடிகராகவே மாறிவிட்ட சதீஷுக்கு, சில திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்து. ஜெயம் ரவி நடித்த 'தனி ஒருவன்' மற்றும் 'இரு முகன்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். சீரியல் நடிகரான சதீஷ், விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியல் பாக்கியலட்சுமி சீரியலில் 'கோபி' கதாபாத்திரத்தில் அசத்தி  வருகிறார்.


பாக்கியலட்சுமி சீரியலின் வில்லன் இவர் தான், அதேபோல் சில சமயம் ஹீரோவாகவும் காட்டப்படுகிறார்.சீரியலின் கதைப்படி தற்பொழுது இவர் பாக்கியா வீட்டிற்கு மீண்டும் வந்திருக்கின்றார். இவருடன் ராதிகாவும் வந்திருக்கின்றார்.இதனால் இனி என்ன எல்லாம் பிரச்சினை நடக்கப்போகின்றது என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.


சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் சதீஸ் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது பகவத்கீதை படித்துக் கொண்டிருக்கும் புகை்படத்தை பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement