• Aug 07 2025

பரிதாபங்கள் கோபி நடிக்கும் ‘Oh God Beautiful’ பர்ஸ்ட் லுக் வைரல்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

subiththira / 3 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் யூடியூப் மூலம் பிரபலமானவர்களே பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர். சமூகக் கருத்துகளை நகைச்சுவையுடன் மிக அழுத்தமாகக் கூறும் இவர்களின் வீடியோக்கள், இளம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. 


இந்நிலையில், இந்த இரண்டு முக்கியமான கதாபாத்திரங்களின் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான "Oh God Beautiful" தனது பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.


படத்தை இயக்கியுள்ளார் விஷ்ணு விஜயன். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் கோபி மற்றும் சுதாகர் என இருவரும் நடித்துள்ளனர். யூடியூப் வீடியோக்கள் மூலம் அவ்வப்போது நம்மை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த இந்த இருவரும், தற்பொழுது நேர்மையான கதையுடன், பெரிய திரையில் நடிப்பதற்கான முயற்சியில் பயணிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement