• Jul 18 2025

சுதாகரின் திட்டத்தை தவிடு பொடியாக்கிய பாக்கியா.! உண்மையை அறிந்த எழில்! பாக்கியலட்சுமி

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, கோபி பொலீஸ் கிட்ட ஓடர் கொடுக்க வந்த ஆள் நடிக்கிறான் என்று சொல்லுறார். பின் பாக்கியா அவரைப் பார்த்து உங்க பொண்ணுக்கு உண்மையாவே நாளைக்கு கல்யாணமா.? பத்திரிகை இருக்கா என்று கேட்கிறார். அதுக்கு ஓடர் கொடுத்த ஆள் பத்திரிகை அடிக்கல என்று சொல்லுறார். இதனை தொடர்ந்து செல்வி இவருக்கு பெண்ணு இருக்கா என்றே எனக்கு சந்தேகமாக இருக்கு என்று பொலீஷை பார்த்துச் சொல்லுறார்.


பின் பொலீஸ் ஓடர் கொடுக்க வந்தவரைப் பார்த்து பொய்யா சொல்லுற என்று கேட்டு அடிக்கிறார். பொலீஸ் அடிச்சவுடனே அந்த ஆள் உண்மையை சொல்லுறார். இதனை தொடர்ந்து, அந்த ஆள் பொலீஸ் கிட்ட இருந்து தப்பிச்சு ஓடுறார். பின் ஈஸ்வரி பாக்கியாவை பார்த்து ஏற்கனவே உனக்கு எதிரிகளுக்கு பஞ்சம் இல்ல இப்ப புதுசா வேற ஒராள் சேர்ந்திருக்கான என்று கேட்கிறார். 

இதனை அடுத்து இனியா பாக்கியாவை பார்த்து நல்ல காலம் நீ காசு வாங்காம வேலை பண்ணேல என்று சொல்லுறார். பின் கோபி எழிலை பார்த்து வேலை எல்லாம் எப்புடி போகுது என்று கேட்கிறார். அதுக்கு எழில் அதெல்லாம் நல்ல படியா தான் போகுது என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து கோபி எழிலிட்ட இனியாவ கொஞ்சம் நல்ல படியா பாத்துக்கோ என்று சொல்லுறார்.


இதனை தொடர்ந்து பாக்கியாட ஓடர் கொடுக்கிறேன் என்று ஏமாத்தின ஆள் சுதாகரோட கதைச்சுக் கொண்டிருக்கிறதை பார்த்த எழில் கோபப்படுறார். பின் கோபி இனியாவுக்காக கொஞ்சம் அமைதியாக இரு என்று சொல்லுறார். அதனை அடுத்து எழில் வீட்ட வந்து எல்லாருக்கும் சுதாகர் தான் இந்தப் பிளானை பண்ணினது என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement