• Jul 18 2025

கூலி படத்தின் 3வது பாடல் எப்போது தெரியுமா..? படக்குழு வெளியிட்ட புதிய அப்டேட்.!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த், தற்போது “கூலி” திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம், லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகி வருகிறது. ஏற்கனவே வெளியாகியுள்ள இரண்டு பாடல்களும் ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மூன்றாவது பாடலான ‘Power House’ பாடலின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பின் படி, ‘Power House’ பாடல் ஜூலை 22ம் தேதி இரவு 9.30 மணிக்கு வெளியாகும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அப்டேட் ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தைக் கிளப்பி வருகிறது. 


“Power House” எனும் தலைப்பே இந்த பாடல் எவ்வளவு மாஸாக இருக்கும் என்பதை சொல்லிக் கொடுக்கிறது. பாடல் வெளியீட்டு அறிவிப்பு வெளியானது முதல் #PowerHouseSong, #CoolieThirdSingle என்ற ஹாஷ்டாக்குகள் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றது. 

Advertisement

Advertisement