• Dec 27 2024

பிரியங்கா நல்காரி சொன்னது பொய்யா? ‘நளதமயந்தி’ தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டாரா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!


ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘நளதமயந்தி’ என்ற சீரியலில் நாயகியாக நடித்து வந்த நிலையில் பிரியங்கா நல்காரி திடீரென அந்த சீரியலில் இருந்து விலகி விட்டதாகவும் அவருக்கு பதிலாக ஸ்ரீநிதி அந்த சீரியலில் கமிட் ஆகி விட்டதாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால் தனது பிறந்தநாளை கொண்டாட மலேசியா சென்று இருந்த பிரியங்கா அங்கிருந்து கொண்டே இந்த வதந்திக்கு பதில் அளித்தார் என்பதும் ‘நளதமயந்தி’  சீரியல் இருந்து தான் விலகவில்லை என்றும் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக காத்திருக்கிறேன் என்றும் நான் விலகியதாக வெளியான தகவல் பொய்யானது என்றும் தெரிவித்து இருந்தார்.

ஆனால் தற்போது பிரியங்கா இந்த சீரியலில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது கிட்டத்தட்ட உண்மையாகியுள்ளது. இந்த தொடரில் பிரியங்கா நடித்த கேரக்டரே முடிவடைந்தது போல் கதை சென்று கொண்டு இருப்பதை அடுத்து பிரியங்கா நல்காரி மீண்டும் இந்த தொடரில் வர வாய்ப்பு இல்லை என்றே கூறப்பட்டது

இதுகுறித்து பிரியங்கா வட்டாரத்தில் விசாரித்த போது ’ரோஜா’ சீரியல் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தான் ’சீதாராமன்’ தொடரில் நடிக்க அவருக்கு ஜீ தமிழ் சேனல் வாய்ப்பு கொடுத்தது. அவர் கேட்ட அதிக சம்பளத்தையும் கொடுத்தது. ஆனால் அந்த சீரியல் நன்றாக சென்று கொண்டிருந்தபோதே திடீரென அவர் திருமணம் செய்து கொண்டதால் சீரியலில் பிரச்சனை உண்டாகியது. குறிப்பாக அவர் கணவர் அவர் நடிப்பதை விரும்பவில்லை என்று சொல்லி அவர் வெளியேற விரும்பியதாக கூறியது ஜீ தமிழ் சேனலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

’சீதாராமன்’ சீரியல் நன்றாக பிக்கப் ஆகிக் கொண்டிருக்கிற நேரத்தில் அவர்  திடீரென்று   விலகி விட்டார். இதனை அடுத்து சில மாதங்கள் கழித்து மீண்டும் ‘நளதமயந்தி’ சீரியலில் நடிக்க ஆரம்பித்த நிலையில் தற்போது தான் அந்த சீரியலும் ஹிட்டாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலிலும் அவராகத்தான் விலகிவிட்டார். அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை, அவர் மீது சேனலுக்கு ஒருவித அதிருப்தி ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ‘நளதமயந்தி’ சீரியலில் ஸ்ரீநிதி கமிட் ஆகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ’நான் பிரியங்கா கேரக்டரில் நடிக்கின்றேனா என்பது எனக்கு தெரியாது, என்னிடம் இந்த சீரியலில் சிறப்பு தோற்றம் என்று தான் சொல்லிக் கூப்பிட்டார்கள், படப்பிடிப்பு நடக்கும்போது தான் என்ன வேடம் என்று தெரியும்’ என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement