• Dec 27 2024

பிரபல ஜோதிடராக மாறிய ‘கோலங்கள்’ நடிகர்.. தனக்கு தானே ஜாதகம் பார்த்தாரா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

‘கோலங்கள்’ சீரியலில் நடித்த நடிகர் ஒருவர் ஏற்கனவே செல்போன் கடையில் வேலை பார்ப்பதாக வெளியான செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் அதே ‘கோலங்கள்’ சீரியலில் நடித்த ஒருவர் தற்போது ஜோதிடராக இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் உருவான ‘கோலங்கள்’ என்ற தொடரில் மனோ என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகர் ஸ்ரீதர். அந்த தொடரின் வெற்றிக்கு பிறகு ’தலையணை பூக்கள்’ உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்த நிலையில் தற்போது அவர் சின்னத்திரையில் இருந்து விலகி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியபோது திருச்செல்வம் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில்தான் கூத்து பட்டறையில் இணைந்து முறைப்படி நடிப்பு பயிற்சி பெற்றேன். அதன் பிறகு சீரியலில் ஓரளவு வாய்ப்பு கிடைத்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினேன். விகடன் நிறுவனம் மூலம் சில சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு உண்மையிலேயே அதிர்ஷ்டம் தான். அந்த காலம் என்னுடைய பொற்காலம் என்றும் சொல்லலாம்.



இந்த நிலையில் தான் திடீரென எனக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் இன்ஸ்டாகிராமில் எனது புகைப்படத்தை வெளியிட்டு நான் வாய்ப்புகளை தேட விரும்பவில்லை. எனக்கு விருப்பமான ஜோதிட துறையில் கவனம் செலுத்தினேன். எனது அப்பா ஒரு பிரபல ஜோதிடர் என்பதால் அவரது வழியில் நானும் ஜோதிடம் பார்க்க ஆரம்பித்து விட்டேன். அதில் தற்போது ஆய்வுகளும் செய்து வருகிறேன்’ என்று கூறினார்.

மேலும் என்னுடைய ஜாதகத்தில் நான் மிகப்பெரிய நடிகராக வருவேன் என்று இருப்பதால் நிச்சயம் எனக்கு மீண்டும் நடிக்க என வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று அவரிடம் ஜாதகம் கேட்டபோது மீண்டும் மத்தியில் மோடி ஆட்சி தான் வரும், தமிழகத்தை பொருத்தவரை திமுக கூட்டணிக்கு அதிக சீட்டுகள் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த முறை ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தான் சாம்பியன் பட்டம் வெல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நடிகர் ஸ்ரீதர் தனக்குத்தானே பார்த்த ஜோதிடம் மற்றும் தேர்தல், ஐபிஎல் ஜோதிடம் பலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement