தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் ‘பெத்தி’. கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படம், இந்திய சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முக்கியமான விளையாட்டு திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
இந்தப் பிரம்மாண்டத் தயாரிப்பில், ராம் சரணுடன் சேர்ந்து கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் மற்றும் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளராக ஒஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர். ரஹ்மான் பணியாற்றுவது, இப்படத்தின் முக்கிய ஹைலைடாகும்.
சுகுமார் ரைட்டிங்ஸ், வ்ரிதி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. அதிக பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் வீடியோ ஏற்கனவே வெளியான நிலையில், ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் 2026 மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பிறந்தநாளை கொண்டாடும் சிவராஜ்குமாருக்கு படக்குழு இணையத்தில் வாழ்த்து தெரிவித்ததோடு, அவருடைய ‘கவுர்நாயுடு’ கதாபாத்திரத்தைக் குறிக்கும் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுவருகிறது. ‘பெத்தி’ படம் தெலுங்கு சினிமாவில் மட்டுமன்றி, பான்-இந்திய அளவிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!