• Jul 13 2025

மெலிந்து போன பவித்ரா... வதந்திகளை முறியடித்த உண்மை பதிவு..!

luxshi / 5 hours ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பான'குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகையும் மாடலுமான பவித்ரா லட்சுமி, சமீபத்தில் உடல் எடை அதிகமாக குறைந்து காணப்படுகிறார்.

அவரது சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “என்ன ஆச்சு?”, “அவள் சர்ஜரி செய்திருக்கிறாளா?” என்ற கேள்விகளையும், விமர்சனங்களையும் சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றனர்.


இதற்கு பதிலளித்த பவித்ரா, “நான் சீரியஸான உடல்நலப் பிரச்னையில் இருக்கிறேன். சிகிச்சை பெற்று வருகிறேன். என்மீது அக்கறையும் கரிசனமும் கொண்ட அனைவருக்கும் நன்றி. 

ஆனால், ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். என்னுடைய வாழ்க்கையை மேலும் சிரமப்படுத்த வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டார்.

பவித்ராவின் உணர்ச்சிபூர்வமான பதிவு அவரது ரசிகர்கள் மத்தியில் பரவலான ஆதரவை பெற்றுள்ளது. 


இந்நிலையில் அவர் விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement