• Dec 25 2024

முன்பக்கமும் காட்டி இருக்கலாம்.. ரம்யா பாண்டியன் வொர்க்-அவுட் வீடியோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நடிகை ரம்யா பாண்டியன் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ரசிகர்கள் மத்தியில் ரம்யா பாண்டியன் பிரபலமானார். இந்த பிரபலத்தின் அடிப்படையில் சில படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது என்பதும் ஒரு சில வெப் தொடர்களில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரம்யா பாண்டியன் பதிவு செய்து வந்தாலும் அவருக்கு இன்னும் பெரிய அளவில் திரையுலகில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது துரதிர்ஷ்டமே.  இருப்பினும் தனது இரண்டரை மில்லியனுக்கும் மேலாக இருக்கும் ஃபாலோயர்களுக்காக அவ்வப்போது அவர் கிளாமர் வீடியோக்களை குறிப்பாக வொர்க்-அவுட் செய்யும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் சற்று முன் அவர் ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்த நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. குறிப்பாக பின்பக்கம் இருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் ’முன்பக்கமும் காண்பித்து இருக்கலாம்’ என்றும்’ வேற லெவலில் உடலை பிட்டாக வைக்கிறீர்கள்’ என்றும் ’நீங்கள் ஒலிம்பிக் செல்ல போகிறீர்களா’ என்றும் பல்வேறு கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.



Advertisement

Advertisement