• Dec 25 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’.. கண்டிஷன் போட்டாரா வெங்கட்? அதான் செந்தில் கேரக்டர் இப்படி மாறிடுச்சா?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’  சீரியலில் சமீபத்தில் செந்தில் கேரக்டரில் வசந்த் வசிக்கு பதிலாக வெங்கட் நடித்து வருகிறார் என்பதும் வெங்கட் வந்த பிறகு செந்தில் கேரக்டர் சற்று வித்தியாசமாக இருக்கிறது என்பதையும் பார்த்தோம்.

வசந்த் வசி நடித்தவரை செந்தில் கேரக்டர் ஒரு அப்பாவியாக இருக்கும், அப்பாவை எதிர்த்து பேசாத ஒரு அடக்கமான மகன் கேரக்டராக இருந்தது என்பது தெரிந்ததே. ஆனால் வெங்கட் வந்த பிறகு இந்த கேரக்டருக்கு கொஞ்சம் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.  குறிப்பாக கவர்மெண்ட் வேலைக்கு போய் உங்க அப்பாவின் முன் நின்று சவால் விடுவேன் என்றும் அப்பா உன்னை திட்டினாரா நான் அவரை போய் கேட்கவா என்பது போன்ற வசனங்களை பார்க்கும் போது செந்தில் கேரக்டர் திடீரென ஒரு தைரியமான கேரக்டராக மாறிவிட்டது என்பதையும் இந்த சீரியலை உற்று கவனித்து இருப்பவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்நிலையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் நடிக்க கமிட்டாகும் போதே ரொம்ப அப்பாவித்தனமான கேரக்டரில் நடிக்க மாட்டேன் என்றும், என்னுடைய கேரக்டருக்கு கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் இயக்குனரிடம் வெங்கட் நிபந்தனை விதித்ததாகவும் அதை ஒப்புக் கொண்டதால் தான் தற்போது அவரது கேரக்டரில் மாற்றம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  எனவே கதிர் போலவே பாண்டியனை எதிர்த்து பேசும் ஒரு கேரக்டராக செந்தில் மாறுவார் என்றும் அதேபோல் ரொமான்ஸ் காட்சிகளில் புகுந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 2 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளது என்பது ரசிகர்களுக்கு கூடுதல் தகவலாகும்.

Advertisement

Advertisement