• Dec 25 2024

Leo Success விழாவில் காக்கா கழுகு கதைக்கு குட்டி ஸ்டோரி சொன்ன ரத்னகுமார்! சூட்சுமமாக ரஜினிக்கு வழங்கப்பட்ட பதிலடி?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் வெற்றி விழா, நேரு ஸ்டேடியத்தில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குறித்த விழாவில் குட்டி ஸ்டோரி ஒன்றை சொல்லி அரங்கத்தை வைத்துள்ளார் ரத்னகுமார். 

லியோ சக்ஸஸ் வெற்றி விழாவிற்கான முன்னேற்பாடுகள், கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் நிலையில், அதிகப்படியான கூட்டங்கள் கூடுவதை தவிர்க்கவும், அசம்பாவிதங்கள் நேராமல் இருக்கவும் பொலிசாரால் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த லியோ வெற்றி விழாவில் பேசிய ரத்னகுமார், 'தனக்கு சினிமா ஆசை வர காரணமே தளபதி விஜய் தான். நாம எவ்ளோ உயரத்தில பறந்தாலும் பசிச்சா கீழ வந்து தான் ஆகணும்' என பேசியுள்ளார். அதன்படி ரத்னகுமார் அப்படி பேசியதும் ஒட்டுமொத்த அரங்கமே அதிர்ந்து கரவொலிகளை எழுப்பியுள்ளனர்.


ஏனென்றால் ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கழுகு எள காக்கா கதை சொன்னது பெரும் சர்ச்சையை கிளப்பியது. நடிகர் விஜய்யை தான் காக்கா என ரஜினிகாந்த் சொன்னாரா என ஏகப்பட்ட விவாதங்களும் ட்ரோல்களும் கிளம்பின. 

இந்நிலையில், ரத்னகுமார் தற்போது லியோ வெற்றி விழாவில் அதற்கு பதிலளிக்கும் விதமாக ஒரு குட்டி ஸ்டோரி சொல்லி அரங்கத்தை அதிர வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement