நகைச்சுவை மற்றும் சமூக கருத்துகளை ஒருங்கிணைத்து தனித்துவமான பாணியில் திரையுலகில் தடம் பதித்தவர் ஆர்.ஜே. பாலாஜி. ஆரம்பத்தில் ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கிய அவர், பின்னர் திரைப்படங்களில் நடிகராகவும் காமெடி கதாபாத்திரங்களிலும் கவனம் பெற்றார்.
அவர் நடித்த படங்களில் எல்.கே.ஜி திரைப்படம் குறிப்பிடத்தக்க அரசியல் நையாண்டி படமாக பெரிய வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து வீட்ல விசேஷம் போன்ற குடும்பநடை காமெடி படங்களிலும் நடித்தார்.
நடிப்பைத் தாண்டி இயக்குநராகவும் களமிறங்கிய அவர், சமீபத்தில் வெளியான வீட்ல விசேஷம் படத்தின் வெற்றிக்குப் பிறகு, முழுமையாக இயக்குநராகவும் தனது அடையாளத்தை உறுதி செய்துள்ளார். சமூக பிரச்சினைகளை நகைச்சுவையுடன் கலந்து சொல்லும் அவரது பாணி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இறுதியாக பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த கருப்பு படமும் மாபெரும் ஹிட் கொடுத்தது. நீண்ட நாட்களாக ஹிட் கொடுக்க முயற்சித்த சூர்யாவுக்கும் இது நல்ல கம்பேக் படமாக அமைந்தது.
தனது படைப்புகள் மூலம் பொழுதுபோக்குடன் சிந்தனையையும் தூண்டும் விதத்தில் செயல்பட்டு வரும் ஆர்.ஜே. பாலாஜி, தொடர்ந்து புதிய கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது அடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இன்றைய தினம் பிறந்தநாள் கொண்டாடும் ஆர்.ஜே. பாலாஜிக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், அவர் வெளியிட்ட நன்றி போஸ்ட் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Listen News!