• Apr 07 2025

ரெட் ஜெயண்ட் நிறுவனத்தால் திரையரங்கில் குழப்பம் உருவாகுமா..?வெளியான அதிர்ச்சித் தகவல் ..!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இரண்டு முக்கியமான படங்கள் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. அதாவது நடிகர் விஜயின் "ஜனநாயகன்" மற்றும் சிவகார்த்திகேயனின் "பராசக்தி" படங்களே இந்த விவாதத்திற்கு காரணமாகி உள்ளன.


இப்பொழுது இந்த இரு படங்களின் வெளியீட்டு விவகாரம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூலமாக வெளியான புதிய தகவல்கள் தொடர்பாகவும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் நடிக்கும் "ஜனநாயகன்" படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படம் ஜனவரி  9ம் திகதி திரையரங்குகளில் வெளியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

படம் ரிலீஸாகும் அனைத்து முக்கியமான திரையரங்குகளிலும் "ஜனநாயகன்" படத்திற்கு அதிகளவான வாய்ப்புக்கள் வழங்கப்படும் என்று உறுதியாகியுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியான செய்தியாகவும், திரையரங்குகளுக்குள் பெரும் பரபரப்பை உருவாக்கும் செய்தியாகவும் அமைந்திருக்கின்றது.


ரெட் ஜெயண்ட் நிறுவனம், தமிழ் சினிமாவில் மதிப்பும், தரமும் கொண்ட நிறுவனம். சிலர் "ஜனநாயகன்" பட ரிலீஸை தடுக்கும் விதமாகவே "பராசக்தி" படத்தை வெளியிடுகிறார்கள் என்று கூறியுள்ளனர். "பராசக்தி" படத்தை ஜனவரி 13ம் திகதி திரையரங்குகளில் வெளியிட முடிவெடுத்துள்ளனர். ரெட் ஜெயண்ட் நிறுவனம் எடுத்துள்ள இந்த முடிவு இரு படங்களின் வெளியீட்டையும் சிறப்பாக அமையச் செய்யுமா என ரசிகர்கள் தற்பொழுது கேள்விகளை எழுப்பியுள்ளனர்.


Advertisement

Advertisement