• Dec 27 2024

'நந்தன்' படம் பார்த்து கண்கலங்கி அழுத சிவகார்த்திகேயன்.. விமர்சனம் இதோ...

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும் இயக்குனராகவும் திகழ்பவர் தான் சசிகுமார். இவருடைய படங்கள் என்றாலே குடும்பப் பாங்கான படங்கள் ஆகவும் வித்தியாசமான கதை அம்சங்களில் நட்பு, துரோகம், அரசியல் என்பவற்றை எடுத்துக் கூறும் விதத்திலும் காணப்படும். சசிகுமாரின் படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உண்டு.

சசிகுமார் நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள திரைப்படம் தான் நந்தன். இந்த படத்தை இயக்குனர் இரா. சரவணன் உருவாக்கியுள்ளார். இவர் ஏற்கனவே கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை பெற்றவர்.

இந்த நிலையில், நந்தன் படத்தை பார்த்த நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் குறித்த படம் தொடர்பில் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், நந்தன் படத்தில் சசிகுமார் அண்ணன் வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார் என நினைத்து தான் படம் பார்க்க சென்றேன். படம் எப்படியும் ராவாக இருக்கப் போகின்றது என நினைத்தேன். முதல் காட்சிலேயே ரா. சரவணன் என்னை பிரமிப்பில் ஆழ்த்தி விட்டார்.


எனக்கு இருக்கும் சினிமா அறிவுக்கு இந்தப் படத்தில் முதல் காட்சி பிரம்மிப்பாகத்தான் காணப்பட்டது. அதன் பின்பு சசிகுமார் தனது வெள்ளந்தியான நடிப்பில் என்னை மேலும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். அவரை எளிமையாக பார்த்து உள்ளோம். ஆனால் மிக மிக மிகவும் எளிமையான தோற்றத்தில் அவர் நடித்துள்ளார்.

நந்தன் படம் ராவாக இருக்கும் என எனக்கு தெரியும்.ஆனால் உண்மை இவ்வளவு நெருக்கமாக இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. இந்தப் படத்தை பார்த்து நிறைய இடத்தில் சிரித்தேன். நிறைய இடத்தில் யோசித்தேன். அதேபோல நிறைய இடத்தில் கண் கலங்கினேன். கடைசியாக வேகமாக கைகளை தட்டினேன். எல்லாவற்றையும் ஏற்படுத்தியது ரா. சரவணன் உடைய எழுத்தும் மேக்கிங்கும் தான். மொத்தத்தில் நல்ல அருமையான படைப்பு என தனது கருத்தை முன் வைத்துள்ளார்.


Advertisement

Advertisement