• Dec 27 2024

தமிழச்சி மணிமேகலைக்கு தான் எங்கள் ஆதரவு.. CWC பிரச்சினையை திசை திருப்பும் கோஷ்டி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சமூக வலைதள பக்கங்களை ஆதிக்கம் செலுத்திய  தகவலாக குக் வித் கோமாளி சீசன் 5ல் இருந்து மணிமேகலை வெளியேறியது  பற்றி தான் காணப்படுகின்றது. இதன் ஊடாக தமது கருத்துக்கள், திணிப்புகள், இதுதான் வாய்ப்பு என தங்களது வெறுப்புகளை கொட்டும் செயல்களையும் பார்க்க முடிகின்றன

இந்த நிலையில்,  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்காவுக்கும் மணிமேகலைக்கும் இடையில் நடைபெறும் பிரச்சனையை திசை திருப்பி பார்ப்பதற்கு ஒரு குரூப் செயல்படுகின்றதாம். இதனை வேறு நோக்கி கலவரமாக உருவாக்குவதற்கும் முயற்சி செய்யப்பட்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் இடம்பெற்ற பிரச்சனை பற்றி மணிமேகலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் பங்கு பற்றியவர்கள் இல்லை. அதை போல விஜய் டிவியில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களும் இல்லை.

ஆனால் பிரியங்காவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்களில் குரேஷி, பிரியங்கா மீது எந்த தப்பும் இல்லை. மணிமேகலை கொஞ்சம் நிதானமாக யோசித்து செயல்பட்டிருக்கலாம் என சொல்லியிருந்தார். இவ்வாறு விஜய் டிவியின் முக்கிய பிரபலங்கள் பலரும் பிரியங்காவுக்கு ஆதரவாகவே தனது கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள்.


இவ்வாறான நிலையில், இந்த பிரச்சினையை ஒரு குரூப்  முற்றிலுமாக திசை திருப்பி அதில் குளிர் காய நினைக்கின்றார்கள். அதாவது மணிமேகலை தமிழ் பொண்ணு பிரியங்காவின் முழு பெயர் பிரியங்கா பாண்டே. பாண்டே என்பது அவரது இனத்தின் பெயர்.

தமிழ் மண்ணின் பிறந்த மணிமேகலைக்கு அந்நிய நாட்டிலிருந்து வந்தவர்களால் பிரச்சனை எழுவதா? பார்த்தீர்களா வந்தேறிகளின் ஆதிக்கத்தை..எல்லாத்துறையிலும் தமிழர்கள்  நசுக்கப்படுகின்றார்கள் எனவே அனைவரும் தமிழச்சி மணிமேகலை பக்கம் தான் நிற்க வேண்டும் என்ற கருத்தை பரப்பி வருகின்றார்கள்.

இந்த பிரச்சனையை இவ்வாறு திசை திருப்புவதால் ஏற்படும் சலசலப்பின் மூலம் ஆதாயம் பெற நடக்கின்றது அந்த கோஷ்டி. ஆனால் இதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. சாதாரண பிரச்சனையை   இரு வேறு இனங்களுக்கு இடையில் பகையை வளர்க்கும் விதத்தில் செயல்படுபவர்களுக்கு தமிழ்நாட்டில் ஒன்றுமே நடக்காது என்பது மட்டுமே கூற முடியும்.

Advertisement

Advertisement