• Dec 27 2024

ராயன் படத்தில் எஸ்.ஜே சூர்யாவுக்கு இத்தனை கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டதா?

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் தனுஷ் தானே இயக்கி நடித்த திரைப்படம் தான் ராயன். இது தனுஷுக்கு 50வது படமாக அமைந்துள்ளது.

இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், எஸ். ஜே. சூர்யா, நித்யா மேனன், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா முரளி போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.  

ராயன் திரைப்படம் கேங்ஸ்டார் கதை அம்சத்தில் உருவாகியுள்ளதோடு இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியாகிய தற்போது வரையில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.


ராயன் படத்தில் முக்கிய வில்லனாக நடித்தவர்தான் எஸ்.ஜே சூர்யா. இவர் நடிப்பு அரக்கர் என சொல்லும் அளவுக்கு, இவருக்காகவே படம் பார்க்கலாம் என்று தோன்றும் அளவிற்கு இவரது நடிப்பு இருக்கும்.

இந்த நிலையில், ராயன் படத்தில் எஸ்.ஜே சூர்யாவுக்கு பேசப்பட்ட சம்பள விவரம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இந்த படத்தில் நடிப்பதற்காக எஸ்.ஜே சூர்யாவுக்கு 8 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement