• Jul 09 2025

" இதயத்தில் ஏதோ ஒன்று.." ஆர்த்தி ரவியின் இன்ஸ்டா பதிவு..

Mathumitha / 6 hours ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் ரவிமோகன் மற்றும் ஆர்த்தி ரவி விவாகரத்து சர்ச்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் அவர்களது இரண்டு மகன்களும் ஆர்த்தியுடன் வளர்ந்து வருகின்றனர். சமீபத்தில் மூத்த மகனின் பிறந்தநாளை மிகவும் அழகாக புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து இருந்தார். 


இந்த நிலையில் சோஷியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். கறுப்பு நிற சேலையில் தேவதை போல் ஜொலிக்கும் இவர் தனது மகன்களுடன் இருக்கும் அழகிய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

மேலும் இந்த புகைப்படங்களுடன் "இதயத்தில் ஏதோ ஒன்று..சில மாலைகள் வளரும் சில விஷயங்களுக்கு மத்தியில் ஒரு சூரிய அஸ்தமனம், இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளும் இரண்டு கரங்கள், வார்த்தைகள் இல்லாமல் நெருக்கமாக இருக்கும் இதயம்… எல்லாவற்றையும் முழுமையாக உணர வைக்கும் அமைதியான அன்பு " என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement