மலையாள சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்ற ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்தின் தயாரிப்பு தொடர்பான பணமோசடி விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் லாபத்தில் 40% அளிக்கப்போவதாக கூறி ஒருவர் சுமார் ரூ. 7 கோடி வாங்கி ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில் நடந்து வந்த விசாரணையின் பின் பிரபல நடிகர் சௌபின் சாஹிர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மூவரும் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சினிமா உலகத்தில் பணமோசடிகள் குறித்த விவகாரம் எழுந்திருக்கிறது என்பதால் இது ரசிகர்கள் மற்றும் தொழில்துறையில் பெரும் அதிர்வலை உருவாக்கி உள்ளது. மேலும் சமீபகாலமாக பணமோசடிகள் போதைப்பொருள் பிரச்சனைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!