• Dec 25 2024

காதல் தோல்வியால் சிக்கிய விஜே லயாவின் வாழ்க்கையில் இப்படியொரு சம்பவங்களா..வெளியானது முழுவிபரம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகையும் தொகுப்பாளினியுமான லயாவைபற்றி பார்ப்போமானால், சமீபகாலமாக சமூக ஊடகங்களில் அசுரவளர்ச்சி அடைந்து வருவர்தான் தொகுப்பாளினிலயா அவர்கள். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையுமே அடுத்தவர்களின் வாழ்க்கையை முன்னேற்றகூடியவாறு அமைந்துள்ளது.இவர் நடிகை, தொகுப்பாளினி, ஊக்கமூட்டும் பேச்சாளரும் கூட.சமீபத்தில் இவர் எண்ணித்துணிக என்ற நிகழ்ச்சியை கூட தொகுத்தளித்திருந்தார். அதன் மூலமாக சில சிக்கல்களிலும் சிக்கி இருந்தார்.சசிலயாவின் இயற்பெயர் சசிகலா தர்மராஜ் ஆகும்.இவருடைய சகோதரி தியாதர்மராஜ்.விளம்பரங்களில் சொல்வார்கள் கறைநல்லது என்பது போல இவருடைய வாசகம் யாதெனில் அவமானம் நல்லது என்பதாகும்.

அதனைசவாலாக எடுத்து அடுத்த லெவலுக்கு போகவேண்டும் என்பதே இவரின் கருத்தாகும்.இவருக்கு தமிழ் உச்சரிப்பு சரியாகவரவில்லை என்று பலர் இவரை அசிங்கப்படுத்தி இருக்கின்றார்கள்.இப்படியாக பல நிராகரிப்புகளை தாண்டி இன்று வலம் வந்துகொண்டிப்பவர்.இவருடைய பேச்சு நடைஉடைக்கென தனிரசிகர்பட்டாளமே உண்டு.எனலாம்.இவற்றிலும் குறிப்பாக இவரின் சிகை அலங்காரத்திற்கே தனிரசிகர்பட்டாளம் உண்டு.இவரை பார்க்கும் அனைவரும் எங்கு இவர் போனாலும் கார், விமானம் என்று செல்வதால் இவரை பெரிய பணக்காரர்  என்று கூறுவர்.


பலர்இவரை திட்டியும் கூட உள்ளார்கள்.ஆனால் இவர் ஒரு நெசவாளர் குடும்பத்தை சேர்ந்த பெண்மணி ஆவார்.இவர் திண்டுக்கல்லை சேர்ந்தவர்.பாடசாலையும் வீட்டிற்கு அருகிலேயே உள்ளதால் நடந்தே செல்வார் சில நேரங்களில் அவரது தந்தை தனதுசைக்கிளிலும் அழைத்துசெல்வார்.ஓட்டு வீட்டில் ரேசன் அரிசியை உண்டு கூட வாழ்ந்துள்ளனர்.ஆனாலும் வீட்டின் கஸ்ரம் தெரியாம இவரை வளர்த்துள்ளனர் வீட்டார்.இவர்தான் வீட்டின் மூத்த இளவரசி. பொதுவாக மூத்தபெண் எல்லா கஸ்ரங்களையும் தெரிந்து வளர்வார்கள் என்று கூறுவர் ஆனால் இவர் வறுமை தெரியாமல் அந்த உணவை உண்ணமாட்டேன் என அழுததும் உண்டு.இப்பொழுது இவர் நிறைய உற்பதிகளுக்கு நல்ல நல்ல கருத்துக்களையும் கொடுத்துவருகின்றார்.இதனால் புதிய புதிய அநேக உற்பத்தியாளர்கள் இவரை நாடி வருகின்றனர்.ஆனால் அப்போது அவர் ஒரே துணியைதான் மறுபடி மறுபடி அணிவாராம். 

அணிவதற்கு கூட நல்ல உடைஇல்லை என்ற அளவுக்கு வாழ்க்கை இருந்துள்ளது.உண்பதற்கு நல்ல உணவு கூட இல்லை. கறி உணவெல்லாம் அரிதிலும் அரிதாகவே கிடைத்துள்ளது.உணவுக்காவும் ,துணிக்காகவும், பணத்திற்காகவும் அதிகமாகவே ஏங்கிஇருக்கின்றார்.அந்த மாதிரியான நிலமை யாருக்குமே வர கூடாது என்பதற்காகவே எங்கு அவமானப்பட்டு நின்றாரோ அங்கிருந்து தனது பயணத்தை தொடர்ந்துள்ளார்.தொகுப்பாளினி ஆகவேண்டும் ஆசையில் காலேட்ஜ் வாழ்க்கையில் அதனை செய்கின்ற போதே பகுதிநேரவேலை கிடைக்கின்றது. அப்போதுதான் சசிகலா என்ற பெயர் நன்றாக இல்லை என நினைத்து சசிலயா என்று மாற்றிஇருக்கின்றார்.அவ்வாறுதான் இவரது பெயர் மாறியது என இவர் சொல்லிஉள்ளார்.இவருள்ளும்  அநேக ரகசியங்கள் உள்ளது.இவர் அதிகமாக  காதல் பற்றியும் காதல் தோல்வி பற்றியுமே பேசி உள்ளார்.இதற்கு  காரணம் இவருக்கு ஏற்பட்ட காதல் தோல்வி ஆகும்.அது ஒரு உணர்வுபூர்வமான கதை ஆகும்.எதற்காக வந்தாரகள் எதற்காக அன்பு கொடுத்தார்கள் எதற்காக விட்டுச்சென்றார்கள் என்ற வலி ஏக்கம் என்பன காரணமாகவே அதனை அடுத்தவர் அனுபவிக்க கூடாது என்பதற்காக அதனை அதிகமாக பேசுகிறேன் என கூறி உள்ளார்.இளைஞர்களுக்கு நிச்சயமாக இந்த வார்த்தைகள் நம்பிக்கை கொடுக்கும் என நம்புவதாக கூறிஉள்ளார்.


அதேபோலவே சொந்தகாரர் முன்னிலையிலும் நன்றாக வாழ்ந்துகாட்டவேண்டும் என்று எண்ணியதாகவும் மிகவும் வறுமையாக இருந்த நேரம் இவரெல்லாம் எங்கே முன்னேறபோறார்கள் என கூறியவர்கள் இன்று வாயடைத்துநிற்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டதாக கூறி உள்ளார்.சந்தித்த அனைத்து அவமானம் வேதனை எல்லாவற்றையும் தாண்டி இன்று சாதனைபெண்ணாக நிற்கிறார்.இவர் தனது கையில் மயிலிறகு ராட்டுவும் அடித்துள்ளார்.இவர் மொட்டை அடித்து அதிக வீடியோ பதிவுசெய்துள்ளார். அதனை அவதானித்த சிலர் அவருக்கு கேன்சரோ என்றும் கேட்டுள்ளனர். அவருக்கு கேன்சர் இல்லை ஆனாலும் அவர்களுக்காகவே அதனை செய்த்தாகவும் கூறி இருந்தார்.

பெண்களுக்கு அழகே கூந்தல் தான் அதுவும் தமிழ்பெண்களுக்கு அது பேரழகு ஆனா கேன்சர் நோயாளிகளுக்கு முடி உதிர்வு வழுக்கை போன்ற பிரச்சனைகளும் காணப்படும்.இதனால் அவர்கள் தன்னைதானே தனிமையில்வைத்துக்கொள்வார்கள். எந்த விழாவிலும் கலந்துகொள்ளமாட்டார்கள்.மேலும் சிலர் தற்கொலைகூட செய்ததுண்டு.இது அத்தனையும் தெரிந்து அறிந்தபின்னர் அவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுப்பதற்காக மொட்டை அடித்துள்ளார்.இதனூடாக உண்மையான அழகு முடியில் இல்லை மனதில்தான் உள்ளது என புரியவைத்தாக கூறி உள்ளார்.அந்த வீடியோ பார்த்த அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி இருந்தனர்.

அதன்பின்னர் அவரது பேச்சுக்கு அநேகமானோர் அடிமையானார்கள்.இவருக்கு சிறுவயதிலேயே இவரது தாயர் கூறி இருக்கின்றார் இவருக்கு லகர ளகர உச்சரிப்பு சரியாக வரவில்லை என்று.இதனால் அவர் கவலைப்பட்டதும் உண்டு.ஆனால் இப்போது இவர் பேசும் தமிழ் இலங்கை தமிழா செந்தமிழா என பலரும் வியந்து வருகின்றனராம்.இவர் சமீபத்தில் தன்னுடைய மகனுடன் சூப்பர் மாம் சீசன் மூன்றில் கலந்து கொண்டிருந்தார் . இதில் இவரது தாயாரும் ஆசிரமத்தில் இருந்து பலரும் வந்திருந்தனர்.இவருக்கு மனது கஸ்ரமாக இருக்கின்ற நேரங்களில் வாசிகசாலை செல்வார். அதிகமான நேரங்கிளில் ஆசிரமம் செல்கின்ற ஒருவர்.அவர்கள் எல்லோரையும் இவர்தான் பார்த்துக்கொள்கிறார்.


இவர் முதலில் ஒரு ரோம் பையன் தோற்றத்தில்தான் இருந்துள்ளார்.இதனைபார்த்த பலர் இவருக்கு திருமணம் ஆகவில்லை என்று கூட எண்ணியதுண்டு.ஆனால் இவருக்கு வளர்ந்த ஒரு பையன் உண்டு என்பது சூப்பர் மாம் நிகழ்சியால்தான் உலகிற்கே தெரிந்தது எனலாம்.பையனுடைய பெயர் யுகன்சர்வேஷ்.இவர் தளபதியின் தீவிர குட்டி ரசிகராவார்.இப்படியான லயாவின் வாழ்க்கையில் சில கசப்பான சம்பவங்களும் நடந்துள்ளது.2021ல் இவருடைய சகோதரிக்கே பெரிய பிரச்சனை வந்துள்ளது. அதில் இவர் தர்ணா போராட்டம் கூட செய்திருக்கின்றார்.இவருடைய சகோதரி ராஜேஸ்வரன் என்பவரை திருமணம் செய்துள்ளார்.அவர் படிக்கவேண்டும் என்று சென்ற இடத்தில் ஒரு பெண்ணோடு தவறானதொடர்பு ஏற்பட் டிருக்கின்றது.இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தையும் உண்டு. அந்த பெண்ணொடு இவர் இருப்பதை பார்த்து விவாகரத்து வேண்டும் ,கைது செய்யவேண்டும் என்ற விடயங்களில் சென்றுள்ளார்.அப்போது ஊரில் இருந்து வந்து சேர்ந்து பொலிஸ் நிலையம் முன்பாகதர்ணா போராட்டம் கூட செய்துள்ளார்.

அந்த விடயமும் சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டது. எல்லோருக்கும் வாழ்வதற்கு நான் அநேக வழிவகைகளை கொடுக்கின்றேன் .ஆனால் எனக்கும் எனது தங்கைகுமே இவ்வாறு பேசினால்தான் தீர்வு கிடைக்குமா? என்ற கேள்விகளையும் கேட்டிருந்தார்.இவருக்கு பிடித்த தொகுப்பாளினிவேலையில் இவர் கண்ட ஒரு பேட்டியினால் இவருக்கு சிக்கலும் வந்துள்ளது.பயில்வானை பேட்டி எடுத்திருக்கின்றார். பயில்வான் சொன்னவிடயம் விஜே லயா ஒரு மோசடி பெண் என கூறி இருக்கின்றார்.இதோடு மட்டும் நிறுத்தாமல் லயாவுக்கு மூன்று கணவர் மற்றும் ஒரு கள்ளக்காதலனும் உள்ளாதாகவும் அந்த கள்ளகாதலன் பெயர்தான் திலீப்,அவரோடுதான் லிவிங்கில் உள்ளதாக கூறினார்.இதெல்லாம் பயில்வான் கூறவில்லை என்றும் அவருடைய பேட்டியை பார்த்து நாமக்கல் மாவட்டத்தில் இருந்துஒரு நபர் பயில்வானுக்கு வாட்சாப் செய்தாதாக கூறிஇருந்தார் பயில்வான்.

மேலும் அப்படிப்பட்ட  அந்த நபர் லயாவால் பணமோசடியில் சிக்குப்பட்ட நபராவாராம் நிறையவே பணமோசடிகளை செய்ததாகவும் பலபேரை ஏமாற்றியதாகவும் கூறி உள்ளதோடு  இவர் கமலஹாசனுடன் மக்கள்மைய கட்சியில் சேர்ந்து போஸ்டர் எல்லாம் ஒட்டி இருக்கின்றாராம் விஜே லயா.என பயில்வான் கூறி இருக்கின்றனர்.இதற்கு லயா அவ்வளவாக எந்த பதிலையும் வழங்கவில்லை என்றாலும் நிறைய பேர் பயில்வானுக்கும் நேராகவும் எதிராகவும் கருத்துக்களை கூறி இருந்தார்கள்.இப்போது வரை லயாவுக்கு அதிகமான ரசிகர்பட்டாளம் உண்டு.இதனைவிட சீரியலில் பொலிஸ் வேடத்திலும் நடித்துள்ளார்.இதனைவிட மீனாட்சி பொண்ணுங்க சீரியலிலும முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துகொண்டிருக்கின்றார்.ரிக்ரோக்  என்ற ஆப் மூலமாக மக்களுக்கு அதிகமான நல்ல விடயங்களைகூறி ரசிகர்பட்டாளத்தையும் அள்ளி உள்ளார் எனலாம்.



Advertisement

Advertisement