• Dec 27 2024

சூர்யாவின் வயநாடு நிலச்சரிவு பதிவு... ஆனால் ஒரு ரூபாய் கூட வெளியே வரவில்லை..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

வயநாடு நிலச்சரிவு குறித்து நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் நிவாரண நிதியாக ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

சமீபத்தில் வயநாடு பகுதியில் உள்ள மூன்று கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 200க்கும் அதிகமானோர் இறந்து விட்டனர் என்பதும் இன்னும் நூற்றுக்கணக்கான பிணங்கள் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நடந்த ஒரு சில மணி நேரங்களில் நடிகர் விஜய் தனது இரங்கல் அறிக்கையை வெளியிட்டார் என்பதும் அதனை அடுத்து கமல்ஹாசன் உள்பட ஒரு சிலர் தங்கள் சமூக வலைதளங்களில் இது குறித்து பதிவு செய்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

ஆனால் நடிகர் விக்ரம் மட்டுமே இரங்கல் தெரிவித்ததோடு இல்லாமல் 20 லட்ச ரூபாயை கேரள முதல்வர் நிவாரண நிதிக்காக வழங்கினார் என்பதும் இதனை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தது என்பதையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா சற்றுமுன் தனது சமூக வலைதள பக்கத்தில் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட  குடும்பங்களுக்கு என்னுடைய பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்றும் இதயம் நொறுங்கும் அளவுக்கு அந்த நிகழ்வு என்னை பாதித்தது என்றும் அதே நேரத்தில் நிவாரண பணியை செய்து வரும் அரசு அமைப்புகள், தன்னார்வல தொண்டர்கள் மற்றும் அனைவருக்கும் எனது மரியாதை செலுத்துகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் இந்த பதிவை செய்த சூர்யா, எந்தவிதமான நிதி குறித்து அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும் கண்டிப்பாக சூர்யா நிவாரண நிதியாக ஒரு பெரிய தொகையை வழங்குவார் என்று அவருடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Advertisement

Advertisement