• Apr 04 2025

CSK அணிக்கு வாழ்த்துத் தெரிவித்த "தக்லைஃப்" படக்குழு...!ஓப்பனிங்கே அமோகமா இருக்கே..!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த வருடம் இரண்டு சந்தோசங்கள் கிடைத்துள்ளன. ஒரு பக்கம், சினிமா உலகின் இரண்டு பெரிய நாயகர்கள் அதாவது உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்க நாயகன் மணிரத்னம்  ஆகியோர் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர். அவர்களின் இணைப்பு மூலம் உருவாகியுள்ள திரைப்படம் தான் தக்லைஃப்.

மற்றொரு பக்கம், ரசிகர்களை சந்தோசப்பட வைத்திருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 சீசன் இன்று தொடங்குகின்றது. இதற்கான முதல் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெறவுள்ளது.


இந்நிலையில், “தக் லைஃப்” படக்குழு, சென்னை அணியை ஊக்கமளிக்கும் வகையில், CSKவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் ஒரு சிறப்புக் காணொளியை இன்று வெளியிட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதில் சிம்பு ,கமல் ,திரிஷா மற்றும் கவுதம் கார்த்திக் ஆகியோர் இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘தக் லைஃப்’ திரைப்படம் 2025 ஜூன் 5ம் திகதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் புரொமோஷனுக்காக மட்டும் இல்லாமல், மக்களிடம் நேரடித் தொடர்பை உருவாக்கும் நோக்கில் தக் லைஃப் படக்குழு இன்று ஒரு  முயற்சி எடுத்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் IPL 2025 ஆட்டத்தை இன்று சந்திக்கவிருக்கும் நிலையில், படக்குழு CSK அணிக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது.




Advertisement

Advertisement