• Dec 25 2024

துணிவு பட நடிகை மஞ்சு வாரியாருக்குள் இத்தனை சோகமா?- இதுவரை யாரும் அறிந்திடாத தகவல்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகில் பிரபல்யமான நடிகையாக வலம் வருபவர் தான் மஞ்சு வாரியார்.மலையாளத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் இவர் மம்முட்டி மோகன்லால் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த வரும் இவர் அண்மையில் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் நடித்திருந்தார். அந்த வகையில் இவர் குறித்து தான் தற்பொழுது பார்க்கலாம் வாங்க.

அதாவது மஞ்சு வாரியார் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் 15 ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகிய இவர் தற்பொழுது மீண்டும் ரி என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார். அவர் நடித்து வரும் திரைப்படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன. 


இதனைத் தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நடிக்க முதலே இவர் தனுஷிடன் நீண்ட கால நட்பில் இருந்திருக்கின்றாராம். இவர் மலையாளியாக இருந்தாலும் தமிழ் சூப்பராக பேசுவாராம். இவர் நாகர் கோயில் என்னும் இடத்தில் தான் பிறந்து வளர்ந்தாராம்.

இவருக்கு ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வேண்டம் என்று ஆர்வம் இல்லையாம். மோகன்லாலில் தீவிர ரசிகையான இவர் சின்ன வயசில் இருந்து தியேட்டர் பக்கம் எல்லாம் போனதில்லையாம்.இருந்தாலும் பெற்றோரின் ஆசைக்காகத் தான் படம் பார்க்க போவாராம். இவருடைய அம்மாவுக்கு சினிமா மீது இருந்த ஆர்வத்தை மஞ்சு வாரியார் மீது திணித்துள்ளாராம்.

அதன் படி அம்மாவின் ஆசையால் தான் நடனம் கற்றுக் கொண்டாராம். தொடர்ந்து தொகுப்பாளினியாக வலம் வந்த இவர் ஆரம்பத்தில் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்து வந்தாராம். அதன் பின்னர் தான் கதாநாயகியாக களம் இறங்கினாராம். இவர் பரத நாட்டியம் மட்டுமல்லாது குச்சுப்புடி, கரகம், கதகளி என அனைத்து நாட்டியக் கலையிலும் கைதேர்ந்தவராகவும் இருக்கின்றாராம்.


அசுரன் படத்தில் தனது சொந்தக் குரலில் தான் பேசினாராம். அத்தோடு இவர் 1995ம் ஆண்டு சாக்சியம் என்னும் திரைப்படத்தில் தான் முதலில் நடித்தாராம். தொடர்ந்து நடிகர் திலீப்புடன் இணைந்து இரண்டு படங்கள் நடித்தாராம். அதனால் இருவரைப் பற்றியும் கிசுகிசு வர ஆரம்பித்து விட்டதாம்.

தொடர்ந்து திலீப்பை காதலித்து 1998ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டாராம்.பின்னர் 2015ம் ஆண்டு கணவரை விவாகரத்து செய்து விட்டாராம். அதற்கு காரணம் திலீப் நடிகை காவியாவுடன் ரகசிய தொடர்பில் இருந்தது தான் காரணமாம். இவர்கள் இவ்வாறு தொடர்பில் இருந்ததை கண்டு பிடித்து சொன்னதே நடிகை பாவனா தானாம்.


அத்தோடு மஞ்சுவாரியாருக்கு மீனாட்சி என்ற ஒரு பெண் பிள்ளையும் இருக்கின்றாராம். இவர் 2000ம் ஆண்டு பிறந்தாராம். மீனாட்சி அப்பாவுடன் தான் இருப்பேன் என்று சொன்ன காரணத்தில் மஞ்சு வாரியார் மனமுடைந்து விட்டாராம்.பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஹெவ் ஓல்ட் ஆர் யூ என்னும் படத்தின் மூலம் ரி என்ட்ரி கொடுத்திருந்தாராம்.

இதனைத் தொடர்ந்து தான் நல்ல படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகின்றாராம். எதைப் பற்றியும் கவலைப்படாமல்  தன்னுடைய கெரியரில் மட்டும் தற்பொழுது ஆர்வத்தை அதிகமாகக் காட்டி வருகின்றார் என்றும் கூறப்படுகின்றது.

 

Advertisement

Advertisement